திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 268 ஆக உயர்ந்துள்ளது. நேற்றுவரை திருவண்ணாமலையில் 229 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் இதுவரை 81 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் நேற்று வரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 148 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இன்று சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 187 ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் மற்றும் நாடுகளில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கடந்த மே 24ம் தேதி முதல் வருகை தந்துள்ளனர். அதில், அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, நாளுக்கு நாள் திருவண்ணாமலையில் பாதிப்புகளின் எண்ணிக்கை அதைக்குறித்து வருகிறது. மேலும் இன்னும் 300 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவில்லை. நேற்று மட்டும் திருவண்ணாமலையில் 41 பேர் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.