Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்களில் தீவிர சோதனை – பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு!

கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்களில் தீவிர சோதனை செய்யப்படுகிறது.

இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காட்டிருக்கின்றனர். கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக தான் செல்கிறது. மற்ற பாதைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பாதையில் வாகனங்கள் மட்டுமே சென்று கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்களில் தீவிர சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

அதில் குறிப்பாக மருத்துவத்துறை, காவல்துறை அதிகாரிகள், மற்றும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய கொரோனா இல்லாத நோயாளிகள், மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இவர்கள் மட்டுமே புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இதனால் அனுமதி அளிக்காத வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது. ஒரு சில அனுமதி வழங்க கொளுத்தும் வெயிலிலும் காத்து கொண்டிருக்கின்றனர். புதுச்சேரியில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 52ஆக அதிகரித்துள்ளது. அதில் புதுச்சேரியை சேர்ந்த 46 பேரும், தமிழகத்தை சேர்ந்த 6 பேரும் இதுவரை கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |