Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் குணமடைந்தோர் விகிதம் 41.61% ஆக உள்ளது: மத்திய சுகாதாரத்துறை!!

நாடு முழுவதும் குணமடைந்தோர் விகிதம்நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 41.61% ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்துள்ளதாவது, ” இந்தியா முழுவதும் கொரோனா நோயிலிருந்து இதுவரை மொத்தம் 60,490 நோயாளிகள் மீண்டுள்ளனர். இதன் காரணமாக மீட்பு வீதம் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. தற்போது இது 41.61% ஆக உள்ளது. மேலும், கொரோனா தொற்று பாதித்து உயிரிழப்போர் விகிதம் உலகிலேயே மிகவும் குறைவாக உள்ளது.

மேலும், இந்தியா முழுவதும் 2.87% என்ற அளவில் இறப்பு விகிதம் உள்ளது என தெரிவித்துள்ளார். இந்திய மக்கள் தொகையில் ஒரு லட்சம் பேரில் 10.7 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் அறிவித்துள்ளார். உலகளவில் உள்ள மக்கள் தொகையில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 4.4 இறப்புகள் பதிவாகியுள்ளன.

அதே நேரத்தில் இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 0.3 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது உலகளவில் ஒப்பிடும்போது மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளது” என செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். 41.61% ஆக உள்ளது: மத்திய சுகாதாரத்துறை

Categories

Tech |