Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

களம் இறஙகிய மோடி….! ”இனியும் சும்மா இருக்க முடியாது”பரபரப்பு தகவல்கள் …!!

இந்திய எல்லையோரம் சீனா ராணுவ வீரர்களை குவித்து வரும் நிலையில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.

இந்திய எல்லை பகுதியான லடாக் எல்லையோரம் சீனா அதிக ராணுவ வீர்ர்களை குவித்து வருகின்றது. இதனால் இந்திய – சீன எல்லையில் பதட்டம் ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று நடந்த ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்த நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் இது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தளபதிகள் மற்றும் முப்படைகளுக்கு தலைவரான பிபின் ராவத் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

அதற்கு அடுத்த கட்டமாகத்தான் தற்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முப்படை தளபதிகள் பிபின் ராவத் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனை நடத்துகின்றார்கள். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே வெளியுறவுத்துறை செயலாளருடன் பேசி இருக்கிறார். அப்படிப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். ஓன்று பாதுகாப்பு ரீதியாகவும், மற்றொன்று தூதரக ரீதியாகவும் என எப்படி முடிவு எடுக்கலாம் என ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ஆலோசனைக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனும் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது. சீன ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தை ரோந்து பணியில் ஈடுபடாமல் தடுத்து நிறுத்துகிறார்கள் என்ற புகார் சீன ராணுவத்திற்கும், சீன அரசுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.அதே போலவே இந்திய எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் சீனா ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து இருக்கிறார்கள் என்ற புகாரும் கூறப்பட்டுள்ளது.

ஆகவே அடுத்த கட்டமாக சீனாவுக்கு இணையாக இந்தியாவும் அங்கு குவிக்கப்பட்டு உள்ள ராணுவ வீரர்களை எண்ணிக்கை அதிகரித்தலாம் என்றும் தேவைப்படும்போது பேச்சுவார்த்தை மூலமாக இந்த பிரச்சினைக்கு முடிவு காணலாம் என்று தற்போது பிரதமர் மோடி நடத்தும் ஆலோசனை மூலம் முடிவாகும் என எதிர்பார்க்கலாம்.

Categories

Tech |