தமிழகத்தில் இன்று 611 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9,342ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 52.70% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ல் இருந்து 17,728ஆக உயர்ந்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வந்த 54 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 592 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 386 பேர் ஆண்கள், 260 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று ஒரே நாளில் 10,289 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று புதிதாக 510 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,640ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.
பலியான 127 பேரில் சென்னையில் மட்டும் 91 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இதுவரை 4,31,739 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 8,256 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் 11,217 ஆண்களும், 6,506 பெண்களும், 5 திருநங்கைகளும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 41 அரசு மற்றும் 27 தனியார் மையங்கள் என மொத்தம் 68 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.