ஊரடங்கை அரசு நீடிக்குமா இல்லையா என்பது குறித்து வரும் 30ஆம் தேதி அரசு முடிவு எடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா எண்ணிக்கை குறைப்பதற்கு எல்லா முயற்சிகளையும் தமிழக அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு மருத்துவ வல்லுநர் குழு ஆலோசனை கூட்டத்தை காணொலிக் காட்சி மூலமாக நடத்தி இருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. அந்த ஆலோசனையில் பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதில் சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். ஜெனிவாவில் இருந்து உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், இந்திய மருத்துவ கழகத்தின் தலைவர் டாக்டர் சி என் ராஜா , icmrரில் இருக்கக்கூடியவர்கள் மருத்துவ வல்லுநர் குழுவை சார்ந்தவர்கள் , மருத்துவர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இதில் பல விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது. பிரதானமாக கூட்டத்தில் மருத்துவர்களும், மருத்துவ வல்லுனர்கள் கூறியது, தமிழகத்தில் சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் குறிப்பாக மேற்கு மண்டலம், தெற்கு மண்டலம், மத்திய மண்டலத்தில் இருக்கக்கூடிய மாவட்டங்களில் கொரோனா இல்லாத ஒரு நிலை இருந்தது.ஆனால் கோயம்பேடில் இருந்து வந்தவர்களால் எண்ணிக்கை கூட தொடங்கியது.
தற்போதைய சூழ்நிலையில் கடந்த ஒரு வாரமாக வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் வரக்கூடியவர்களாலும் கொரோனா அதிகரித்து வருவதை மருத்துவ நிபுணர்கள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். எனவே இந்த முறை ஊரடங்கில் சில நடைமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும் என்று மருத்துவ வல்லுனர்கள் அறிவுறுத்தியிருக்கிறது.
மேலும் உடனடியாக ஊரடங்கில் தளர்வு கொண்டு வந்து விடக்கூடாது, இன்னும் 15 நாட்களுக்கு இந்த நீட்டிப்பு செய்யப்பட வேண்டும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இருக்கிறார்கள். தேவையான தரவுகளை கொடுத்து பொதுமுடக்கத்தை நீட்டிக்கப்பட வேண்டும் என்கின்ற கருத்தை முன்வைத்திருக்கிறார்.குறிப்பாக அவர்களுடைய கவலை என்பது வெளி மாநிலத்தில் இருந்து வரக்கூடியவர்களால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகப் படியாக இருக்கின்றது. இதனால் பொது போக்குவரத்து, திரையரங்குகள், மால் உள்ளிட்டவற்றை அனுமதிப்பதால் ஏற்படும் இந்த சிக்கல்களை எல்லாம் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
எனவே ஊரடங்கு விஷயத்தில் உடனடியாக ஒரு முடிவு எடுத்து அவசரப்பட்டு அறிவிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள். இதனால் முடக்கத்தை நீட்டிப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து 30ம் தேதி மீண்டும் ஒரு ஆய்வு கூட்டத்தை நடத்தி அறிவிக்கலாம் என்று சொல்லாட்டுள்ளது. பொதுவாக மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனைக்கு பிறகு அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை என்ன ? அரசுக்கு என்ன பரிந்துரை வழங்கியுள்ளோம் போன்ற விஷயங்களை மருத்துவ வல்லுநர்கள் கூறுவார்கள். ஆனால் இன்றைக்கு அப்படி பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தப்படாமல் , கூட்டம் மட்டுமே நடந்தது.
ஏனென்றால் மீண்டும் ஒரு கூட்டம் நடத்தி பொதுமக்கள் நீட்டிப்பதாக ? வேண்டாமா என்பது குறித்த முடிவை எடுக்கலாம் என்கின்ற ஒரு அறிவிப்பு வந்திருக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மருத்துவர்கள், நிபுணர்கள் சொல்லியதில், வெளி மாநிலத்தில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்து வரக்கூடியவர்கள் எண்ணிக்கை தான் பெரிய பிரச்சினையாக இருக்கின்றது. எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்வதனால் பொது போக்குவரத்தை அனுமதிக்கவேண்டும். நாம சில கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும் என்கின்ற அறிவுறுத்தலை கொடுத்து இருக்கிறார்கள் ஆனால் அரசு தான் இறுதி முடிவு எடுக்க எடுக்கும்.
தமிழக அரசு என்ன முடிவு எடுக்கும் என்பது 30ஆம் தேதி ஆலோசனை கூட்டத்தில் தெரிந்து விடும். பொதுவாக பொதுமுடக்கத்தை தளர்த்த அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகின்றது. ஏனெனில் இப்போதைய முடிவில் ஊரடங்கை தளர்த்தினால் அது பொருத்தமாக இருக்காது, இன்னும் 4 நாட்கள் இருப்பதால் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தால் 30ஆம் தேதியோடு ஊரடங்கை முடிப்பதாக அறிவித்து விடலாம் என அதிகாரிகள் கருதுவதாக தெரிவித்தனர்.