தடை செய்யப்படுமா டிக் டாக் செயலி ? கடந்த சில நாட்களாகவே #BANTIKTOK, #TIKTOKvsYOUTUBE இந்த மாதிரி ஹேஷ்டாக்குகள் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து ட்ரெண்ட் ஆகிக்கொண்டே இருந்தது. அதனைத் தொடர்ந்து கூகுள் பிளே ஸ்டோர்லயும் டிக் டாக் செயலின் நட்சத்திர மதிப்பீடு 4.5திலிருந்து தற்போது 1.4 என்ற அளவிற்கு குறைந்துள்ளது. எதனால தற்போது டிக்டாக் இந்த பிரச்சனையை சந்தித்து இருக்கு அப்படினு தான் பார்க்க இருக்கிறோம் இந்த தொகுப்புல.
இது நாட்டுக்கு முக்கியமான விஷயமாக நீங்க நினைப்பீங்கனு தெரியும், ஆனால் இதைப் பற்றிய புள்ளிவிவரங்கள் எல்லாம் பார்க்கும்போது, இதனுடைய பிரம்மாண்டத்தையும், இதன் தாக்கத்தின் வீரியத்தையும் நம்மால் உணர முடியும்.
புள்ளி விவரம் சொல்வது என்ன ?
டிக்டாக் செயலின் மொத்த பதிவிறக்கம் எண்ணிக்கை 155 நாடுகளில் 200 கோடி பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். அதுமட்டுமில்லாம டிக் டாக் செயலி அதிகம் பதிவிறக்கம் நாடு இந்தியா தான். கிட்டத்தட்ட 61.1 பதிவிறக்கங்கள் இந்தியாவில் மட்டும் நடந்து இருக்கு. அதுல தினமும் 20 கோடிக்கும் குறையாமல் மக்கள் இந்த செயலியை தொடர்ந்து உபயோகப்படுத்திகிட்டு இருக்காங்க.உலக அளவில் மூன்றில் ஒரு பங்கு டிக் டாக் பயனாளிகள் யார் என்று பார்த்தால் இந்தியர்கள் தான்.
பட்டிதொட்டியெங்கும் டிக் டாக்:
மும்பை, சென்னை மாதிரியான பெருநகரங்களில் 20ஆவது மாடியில் வசிக்கக் கூடியவராக இருந்தாலும் சரி ஒரு குக்கிராமத்தில் குடிசை வீட்டில் இருக்க கூடியவராக இருந்தாலும் சரி அனைத்து தரப்பட்ட மக்களையும் இந்த செயலி சென்று சேர்ந்து இருப்பது இதனுடைய வெற்றிக்கான பின்னணி. அதுமட்டுமல்லாமல் முக்கியமான இன்னொரு விசயம் நாம் பார்க்க வேண்டியது டிக் டாக் பயனீட்டாளர்களில் 41 சதவீதம் பேர் 16 வயது முதல் 24 வயதிற்குட்பட்டவர்கள், அதாவது அடுத்த தலைமுறைக்கு இந்த செயலி எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துதுன்னு நாம பார்க்க முடியுது. அதனால தான் இந்த செயலியால் ஏற்படக்கூடிய சாதக, பாதகங்களும் சரி, இந்த செயலி மீது ஏற்படும் பிரச்சனைகளும் சரி ஒதுக்க கூடியவை கிடையாது, உற்று நோக்க வேண்டியவை.
தனித்திறமைகள்:
இந்த டிக் டாக் செயலி எதனால இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைச்சுதுனு பார்த்தோமானால் ரொம்ப அடிப்படையான விஷயம் தான், மக்கள் தங்களுடைய தனித்திறமைகள் எடுத்துக் காட்டுவதற்கான ஒரு பிரத்தியேக தளமாக இது அமைந்திருக்கு. உங்கள் நடிப்பு திறமையாக இருக்கட்டும், பாடல் பாடக்கூடிய திறமையாக இருக்கட்டும் எத்தனையோ மத்தவங்கள கலாய்க்கிறது இருக்கட்டும் இருக்கட்டும், நடன திறமையோ அல்லது நகைச்சுவையா இருக்கட்டும் எல்லாத்துக்குமே ஒரு பிரத்யேக தளமாக டிக் டாக் செயலி அமைச்சுருச்சு.
புகழின் உச்சியில் டிக் டாக்:
அதுமட்டுமில்லாம உபயோகிக்க மிக எளிதானதா இந்த செயலி இருக்கு. எந்த அளவு எளிதானது என்றால், ரொம்ப பிரபலமானது கூடிய பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் செயலிகளை எல்லாம் தாண்டி டிக் டாக் செயலி தற்போது தன்னுடைய புகழ் உச்சியில் இருக்குனு தான் சொல்லணும். இதனால அந்த நிறுவனத்தை கிடைக்கக்கூடிய வருமானமும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கு. இந்த வருடத்தில் மட்டும் பார்த்தால் முதல் மூன்று மாதத்தில் கிட்டத்தட்ட 30 கோடி பதிவிறக்கங்கள் உலகம் முழுவதும் நடந்து இருக்கு. இந்த மாதிரியான நல்ல விஷயங்கள் இருக்கும் வரைக்கும் ஓகே. டிக் டாக் வந்து ஒரு நல்ல டைம் பாஸ். ஆனா இந்த எல்லையை தாண்டும் போது என்னென்ன பிரச்சினைகள் என்னென்ன வருது.
டிக் – டாக் பாதகங்கள்:
ஆபாச நடனங்கள்,
சாதிய வன்முறை பேச்சுகள்,
மதக்கலவரங்களை ஊக்குவிக்கும் விதமான வீடியோக்கள்,
பெண்களுக்கு எதிரான வன்முறை,
ஆபாச நடனங்கள்
இதில் ஆபாச நடனங்கள் விவகாரம் போன வருஷமே பெரிய அளவில் வெடிச்சுது. அத்தனைனை தொடர்ந்து மெட்ராஸ் உயர் நீதிமன்றம் டிக் – டாக் செயலிக்கு தடை விதித்தார்கள்.அதை தொடர்ந்து கிட்டத்தட்ட 60 லட்சம் ஆபாச வீடியோக்கள் டிக் டாக் செயலியில் இருந்து அழிக்கபட்டது, கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் அந்த செயலுக்கு அனுமதி கிடைத்தது. சாதிய வன்முறை பேச்சுகளாக இருக்கட்டும், பெண்களுக்கு எதிரான வன்முறையாக இருக்கட்டும் ரொம்ப அதிக அளவில் இருக்கு என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
ஆசிட் வீச்சு:
மிக சமீபத்தில் ஒரு பிரபல டிக் டாக் பயனீட்டாளர் என்ன பண்ணிருக்காரு அப்படினா பெண்கள் முகத்தில் ஆசிட் வீசுவதை ஆதரிக்கும் விதமாக ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்காரு. இதனை தொடர்ந்து தற்போது இந்திய அளவில் மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது. அதனைத் தொடர்ந்து தான் கூகுள் பிளே ஸ்டோரில் கிட்டத்தட்ட இரண்டு கோடிக்கும் அதிகமானோர் சென்று தன்னுடைய நெகட்டிவான பின்னூட்டங்களை பதிவிட்டுள்ளார், அதனால தான் அந்த நட்சத்திர மதிப்பீடு குறைந்துள்ளது. அதுமட்டும் இல்ல ட்விட்டர் மாதிரியான சமூக ஊடகங்களில் ஹேஷ்டாக் ட்ரெண்டாகி வருகின்றது.
தேசிய மகளிர் ஆணையம்:
இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பெண்களுக்கு எதிராக என்னென்னெ விஷயங்கள் பேசப்பட்டுள்ளது என அனைத்தும் தொடர்ந்து பதிவிடப்பட்டது. இந்த அசிட் வீச்சு சூழ்நிலையில் தான் தேசிய மகளிர் ஆணையம் இந்த விஷயத்தில் இறங்கி இருக்காங்க. இந்தியாவில் டிக் டாக் செயலியை முழுமையாக தடை செய்ய வேண்டும். இதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் தொடர்ந்து அதிகமாகிக்கொண்டே போற சூழல்ல இந்த செயலியை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்ற ஒரு கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
TIK TOK தொடர்ந்து இருக்குமா ? இல்லை தடை செய்யப்படுமா ?
இதையெல்லாம் தாண்டி இந்த செயலி தொடர்ந்து இருக்குமா ? இல்லை தடை செய்யப்படுமா என்கின்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள சுழலில் இதோட வளர்ச்சி எல்லாத்தையும் தாண்டி தொடர்ந்து அதிகரிச்ச் வண்ணம் இருக்குது. இதைத் தொடர்ந்து யூடுப் மாதிரியான ஊடகங்களும் தற்போது இதற்க்கு போட்டியாக இன்னொரு செயலியை நாம் கொண்டு வரணும் அப்படிங்குற பணியில் இறங்கி இருக்காங்க, இது எல்லாத்தையும் தாண்டி டிக் டாக்கை ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தினால் ஒரு நல்ல பொழுதுபோக்கு, ஆனால் அது தப்பாக பயன்படுத்தினால் நிச்சயம் இதனுடைய எதிர்காலம் இந்தியாவில் என்னவாக இருக்கும்னு நம்ம கையில் கிடையாது.