இன்று காலை தமிழக அரசு அதிரடியான, மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதங்கள் முழு ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. இந்த இரண்டு மாதங்களுக்கு தமிழக அரசு சார்பாக விலையில்லா ரேஷன் பொருட்கள் ஆனது ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக ஜூன் மாதத்திற்கான விலையில்லா பொருட்களை கொடுக்கப்படும் என்று தற்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். வரும் 29, 30, 31 ஆகிய மூன்று தினங்களில் வீடு வீடாக இந்த டோக்கன்கள் ஆனது வழங்கப்படும் என்றும் முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படி டோக்கன் வழங்கப்படும் போது பொதுமக்கள் அதில் குறிப்பிட்ட தேதிகளில், குறிப்பிட்ட நேரத்தில் ரேஷன் கடைகளில் விலையில்லா பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய குடும்ப அட்டைதரர்களுக்கு ஒரு கிலோ அரிசி, சர்க்கரை, ஒரு கிலோ துவரம் , கிலோ லிட்டர் சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்கள் கூடுதலாக அரிசி ஆகியவை நியாயவிலைக் கடைகளில் விலை என்று வழங்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி, சர்க்கரை, பருப்பு ஆகிய மூன்று மாதங்களாக தொடர்ந்து வழங்கி மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்திருக்கிறது தமிழக அரசு. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இங்கு மக்களுக்கான விலையில்லா உணவுப் பொருட்களை அவர்களுக்கு சரியாக கொண்டுபோய் சேர்ப்பதற்கான ஒரு நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது என்று இந்த செய்திகள் வாயிலாக தமிழக அரசு சொல்லி இருக்கிறது.