Categories
தேசிய செய்திகள்

எவ்வளவு சொல்லியும் கேட்கல….! ”மாட்டி விட்ட மாநில அரசு” வேதனையில் மோடி …!!

மத்திய அரசின் உத்தரவுகளை மாநில அரசுக்கள் கேட்காததால் பிரதமர் மோடி வேதனையில் இருக்கின்றார்.

சீனாவின் வுகாண் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது வரை ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில்தான் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசாங்கம் பிறப்பித்த நான்காவது ஊரடங்கு வருகின்ற மே 31-ஆம் தேதியோடு நிறைவடைகின்றது.

20 லட்சம் கோடி:

இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு விதமான முன்னேற்பாடுகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவால் நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில், பலரும் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களின் நலனுக்காகவும், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் மத்திய அரசு 20 லட்சம் கோடி ரூபாயை அறிவித்தது.

மத்திய அரசுக்கு சவால்:

இந்தநிலையில் தான் மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு நடைபயணமாகவும், சைக்கிளில் சென்றது அரசுக்கு கூடுதல் சவாலை ஏற்படுத்தியது. பொது வெளியில் பெரும் விவாதத்தை கிளப்பியது. 20 லட்சம் கோடி அறிவித்த மத்திய அரசு புலப்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முறையான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்து கொடுக்கவில்லை, தொழிலாளர்களை மத்திய அரசு கைவிட்டு விட்டது என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கும் வகையில் இந்த நிலை தொடர்ந்தது.

காற்றில் பறந்த உத்தரவு:

இவ்வாறான சூழ்நிலையில் தான் மத்திய அரசு ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுகள் கொண்டு வந்த போது, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மாநில அரசு சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கவேண்டும். அவர்களுக்கான உணவு வசதி ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும். என்றெல்லாம் உத்தரவுகளை பிறப்பித்து இருந்தன, ஆனாலும் இந்த உத்தரவை மாநில அரசுக்கள் காற்றில் பறக்க விட்ட நிலை தான் இருந்தது.

தொழிலாளர்கள் போராட்டம்:

ஆங்காங்கே மாநில அரசை கண்டித்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். உணவு கொடுத்து முறையாக பராமரிக்கவில்லை, எங்களை சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் என்றும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியதும் நாடு முழுவதும் அரங்கேறியது, போராடிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தடியடியும் நடத்தப்பட்டது பெரும் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டது.

அடுத்தடுத்த உயிரிழப்பு:

இதனிடையே ஊருக்கும் செல்லும் போது களைப்படைந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவர்கள் மீது ரயில் ஏறி மரணமடைந்தது, லாரிகளில் செல்லும்போது லாரி விபத்துக்குள்ளாகி உயிரிழப்பும் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டது என அடுத்தடுத்து நடந்த நிகழ்வு அரசின் அலட்சியத்தை காட்டுவதாகவே சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வந்தனர்.

மனதை உலுக்கிய நிகழ்வு:

இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரம் சமூக வலைதலங்களில் ட்ரெண்டாகின. இந்தியா முழுவதும் அவர்கள் படும் துயரம் அனைவரையும் பேச வைத்தது. குழந்தைகளை ஏந்திக்கொண்டு பசியில் செல்லும் தொழிலாளர்களை காண முடிந்ததை போல, காலில் செருப்பில்லாமல் வெயிலின் சூடு காலை பதம் பார்க்க குழந்தைகளும், சிறுவர்களும் சாலையில் ஓடியதை காண முடிந்தது. இந்த நிகழ்வு மக்களின் மனதை உலுக்கியதை போல உச்சநீதிமன்றத்தையும் விட்டுவைக்கவில்லை.

தாமாக முன்வந்த நீதிமன்றம்:

உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. நேற்று நடந்த விசாரணையில், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சிக்கி இருக்கக்கூடிய புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்ந்து தங்களது மாநிலங்களுக்கும், தங்களது கிராமங்களுக்கும் நடந்தும், சைக்கிளிலும் போவதை பார்க்க முடிகிறது. மத்திய, மாநில அரசுகள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை தான் இது தெளிவாக காட்டுவதாக காட்டுகின்றது. இவர்களுக்குத் தேவையான உணவு அல்லது தங்கும் இடமோ செய்து தருவதற்கு கூட மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வில்லை.

அரசின் மீது அதிருப்தி:

மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய சரியான நேரம் இது. இதை ஒரு மிகப் பெரிய தோல்வியாக தான் நாங்கள்  பார்க்கிறோம். இவர்களை காப்பாற்றுவதற்கு தேவையான இலவச போக்குவரத்து வசதி, இலவச  உணவு, இருப்பிடம் ஆகியவை செய்வதற்கு மத்திய அரசு தவறிவிட்டது. இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துளீர்கள் என்று கேள்வி கேட்டுள்ள உச்சநீதிமன்றம், நாளை ( வியாழக்கிழமை) மத்திய அரசு இது சம்பந்தமான விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு  பிறப்பித்துள்ளது.

அரசுக்கு பின்னடைவு:

கொரோனாவை கட்டுப்படுத்தற்காக 4 கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், 60க்கும் அதிகமான நாளாக மக்கள் ஊரடங்கில் இருந்த நிலையில், பொது மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டதையும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் 20 லட்சம் கோடி அரசு அறிவித்து நல்ல முறையில் அரசு செயல்படுகிறது என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த கண்டனம் மத்திய அரசுக்கு பின்னடைவையும் ஏற்படுத்தி உள்ளது.

வேதனையில் பிரதமர்:

ஊரடங்கு, ஊரடங்கு தளர்வு, வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிடும் போதெல்லாம், மாநில அரசுகள் வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்ய வேண்டும் என்று பல்வேறு அறிவுறுத்தலை வழங்கியும் இன்று மத்திய அரசை நீதிமன்றம் கண்டித்துள்ளது என்றால் அதற்கு மாநில அரசுகள் மத்திய அரசின் முழு வழிகாட்டலை கடைபிடிக்கவில்லை என்பது யதார்த்தமான உண்மை. இதனால் தான் நீதிமன்றம் மத்திய அரசை கண்டித்துள்ளது. இது பிரதமர் மோடிக்கு, மத்திய அரசுக்கும் பெரிய வேதனையாக அமைந்துள்ளது.

Categories

Tech |