ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் ஒத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருகின்ற அக்டோபர் 15ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்தது. இதற்கான திட்டமிடலும் முழுவீச்சில் நடந்து வந்த நிலையில் , உலகெங்கும் உள்ள கொரோனா பாதிப்பு காரணமாக 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் இந்த ஒத்திவைப்பு குறித்து ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.