Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக 675 புதிய மருத்துவர்களை நியமனம் செய்ய உத்தரவு!

கொரோனா தடுப்பு பணிக்காக தமிழகத்தில் 675 புதிய மருத்துவர்களை நியமனம் செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 530 மருத்துவர்கள், 2323 செவிலியர்கள், 1508 ஆய்வக உதவியாளர்கள், 2215 சுகாதார ஆய்வாளர்கள் 6 மாத ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிக்காக 675 புதிய மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

ரூ.40 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 3 மாத காலத்திற்கு இந்த பணியானது வழங்கப்பட உள்ளது, தேவைக்கேற்ப பணி நீட்டிப்பு செய்யப்படும் என்றும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மருத்துவ தேர்வாணையத்தில் பதிவு செய்த மருத்துவர்கள் அழைப்பு உடனடியாக பணி சேர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய நலவாழ்வு இயக்ககத்தின் மூலம் நியமிக்க சுகாதார துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 17,728ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,640ஆக உயர்ந்துள்ளது. கொரோனோவால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 127ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9,342 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |