கடந்த இரண்டு மாதங்களாக கொரோனாவின் தாக்கத்தால் ஒட்டுமொத்த உலக நாடுகள் மட்டுமின்றி இந்தியாவும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, உள்ளதால் ஒட்டுமொத்த மக்களும் பொருளாதாரத்தை இழந்து நிர்கதியாக இருக்கின்றனர். தமிழகமும் இதே சூழ்நிலையில் தான் இருக்கிறது. தமிழகத்தில் மக்களின் பொருளாதார முற்றிலும் முடக்கப்பட்டதோடு, கொரோனாவின் தாக்குதல் வேட்டையும் தொடர்ந்து இருப்பது வேதனையின் உச்சமாக பார்க்கப்படுகிறது.
பொருளாதார செயல்பாடு:
கிட்டத்தட்ட நான்கு கட்டங்களாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வருகின்ற மே 31-ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த சூழ்நிலையில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு தொடருமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக மூன்றாம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்படும் போது மத்திய மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை பிறப்பித்து, கட்டுப்பாடுகளை தளர்த்தியதால் அங்கங்கே பொருளாதார செயல்பாடுகள் மாநில அளவில் நடந்து கொண்டிருக்கின்றன.
5ஆம் கட்ட ஊரடங்கு:
மக்களின் எதிர்பார்ப்பாக இருப்பது பொது போக்குவரத்து சேவையாக தான் இருக்க முடியும். ஏனெனில் தங்களின் வாழ்வாதாரத்தை மெய்ப்பிக்க வேலைவாய்ப்பு முக்கிய இடத்தில இருப்பதால் போக்குவரத்து சேவை இருந்தால் மட்டுமே வாழ்க்கை நிலையை ஓட்டமுடியும் என்கின்ற எதிர் பார்ப்போது காலத்தை நகர்த்தி வருகின்றனர். நான்காம் கட்ட ஊரடங்கு மே மாதம் 31-ஆம் தேதியோடு நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.
சிரமத்தில் பொதுமக்கள்:
5ஆம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டால் பொதுப்போக்குவரத்து இருக்காது என்பது நிதர்சனமான உண்மை. ஏறக்குறைய 60 நாட்களாக வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கும் ஒவ்வொரு நபரும் தங்களுடைய குடும்ப பொருளாதாரத்தை முற்றிலும் கொரோனாவால் இழந்துள்ளனர். தினக்கூலிகளாக இருக்கும் மக்களுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தி உள்ளது கொரோனா கால ஊரடங்கு. வீட்டின் வாடகை கூட கொடுக்க முடியாமல், அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாயை வைத்துக்கொண்டு கூக்குரலிட்ட மக்கள் எப்படி குடும்பத்தை சமாளிப்பது ?
கற்பனை பண்ணாத அளவு பாதிப்பு:
முழு ஊரடங்கு தளர்வு ஏற்பட்டு விடாதா ? போக்குவரத்து சேவை தொடங்கி விடாதா ? நாம் எப்படியாவது வேலைக்கு சென்றுவிடலாமா ? என்ற ஏக்கத்தில் மக்கள் இருந்து வருகின்றன.இந்த நிலையில்தான் கொரோனாவின் தாக்கம் ஊரடங்கு தளர்வு கொண்டு வருவதற்கு பெருத்த சவாலாக அமைகிறது. குறிப்பாக தமிழகத்தில் அதன் தாக்கம் கற்பனையிலும் எட்டாத அளவுக்கு இருந்து வருகிறது. இன்று வரை 17,728 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டதில் 9,342 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 128பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் பொதுப்போக்குவரத்து சேவை என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
செய்தியாளர்கள் சந்திப்பு இல்லை:
இதே யோசனை தான் நேற்றைய ஆலோசனையில் இருந்தது.தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வு குறித்து மருத்துவ வல்லுநர் குழுவுடன் தமிழக முதல்வர் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். ஒவ்வொரு முறையும் மருத்துவ வல்லுநர் குழு ஆலோசனை படியே தமிழக அரசும் தளர்வுகளை அறிவித்து வந்தது. அதே போல மருத்துவ வல்லுநர்கள் குழுவும் ஆலோசனை செய்த பின்பு செய்தியாளர்களிடம் அரசுக்கு தங்களின் பரிந்துரைகள் என்ன ? என்பது குறித்து விளக்குவார்கள். ஆனால் நேற்றைய ஆலோசனை குறித்து மருத்து நிபுணர்கள் எதுமே தெரிவிக்கவில்லை. இது பல்வேறு யுகங்களில், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஊரடங்கு தளர்தும் முடிவில் தமிழக அரசு:
தமிழகத்தில் தற்போதைக்கு ஊரடங்கு தளர்வு வேண்டாம், கட்டுப்பாடுகள் இருக்கட்டும். பொதுப் போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டாம். கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றது என்று பல்வேறு பரிந்துரைகளை அரசிடம் தெரிவித்துள்ளது. மருத்துவ வல்லுநர் குழு ஊரடங்கை தொடர்ந்து நீடிக்க அறிவுறுத்திய நிலையில், தமிழக அரசு ஊரடங்கை தளர்த்திக் கொள்ளலாம் என்ற நிலையில் தான் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மீண்டும் பொதுமுடக்கம்:
இதனால் அரசு தரப்பில் வருகின்ற 30ஆம் தேதி இன்னொரு ஆலோசனை கூட்ட்டம் நடத்தி பொதுமுடக்கம் பற்றி அறிவிக்கலாம் என்ற சொல்லப்பட்டுள்ளது. இதனால்தான் நேற்று மருத்துவ நிபுணர்கள் குழு செய்தியாளர்களை சந்திக்கவில்லை. ஊரடங்கு குறித்து அரசு தான் முடிவு எடுக்கும். அதே நேரத்தில் ஒவ்வொரு முறையும் ஊரடங்கு குறித்து மருத்துவ நிபுணர்கள் குழு கொடுக்கும் பரிந்துரை படியே தமிழக அரசும் முடிவெடுக்கிறது. அந்த வகையில்தான் மேலும் ஊரடங்கு தமிழகத்தில் நீட்டிக்கப்படும் என்று தற்போது உறுதியாகியுள்ளது.
அரசு உத்தரவு போட்ட உத்தரவு:
தமிழக அரசு மேலும் ஊரடங்கை நீடிக்க போகின்றது என்பதை உணர்த்தும் வகையில் இன்று காலை அரசு சார்பில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வருகின்ற 29, 30, 31 ஆகிய மூன்று தினங்களில் வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.அதாவது ஜூன் மாதத்திற்கான ஒரு கிலோ அரிசி, சர்க்கரை, ஒரு கிலோ துவரம் , கிலோ லிட்டர் சமையல் எண்ணெய் வழங்க நியாயவிலை கடைக்கு செல்வதற்கான டோக்கன் குறித்த அறிவிப்பு தான் காலை அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு.
மக்களை தூக்கி வாரி போட்டது:
ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் அரசு சார்பில் வழங்கப்படுவதற்கான டோக்கன் வழங்கப்படுவதற்கான அறிவிப்பு அன்றாட தினக்கூலிகளாக இருக்கும் சாமானிய மக்களை தூக்கி வாரி போட்டது. ஏனெனில் ஜூன் மாதமும் அரசு ரேஷன் பொருட்களை வழங்கப்படுகிறதுஎன்றால் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப் படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மருத்துவக்குழு சொன்னது போல பொதுப்போக்குவரத்து அனுமதிக்காமல் இந்த ஊரடங்கு தொடரும் என்பது உறுதியாகியுள்ளது.
பெருத்த ஏமாற்றம்:
ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படும் என்று எதிர்பார்ப்போடு காத்திருந்த மக்களுக்கு இது பெருத்த ஏமாற்ற்றமாக அமைத்துள்ளது. இருந்தாலும் தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் மக்களாகிய நாம் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.