வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல மதுரை, திருச்சி, தருமபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர், கரூர், ஆகிய மாவட்டங்களில் 40 -41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என கூறப்பட்டுள்ளது.
பொதுமக்கள், விவசாயிகள் நண்பகல் 11.30 முதல் பிற்பகல் 3.30 வரை திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மன்னர் வளைகுடா பகுதிகளுக்கு அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் மன்னார் வளைகுடா பகுதிகளால் 40 – 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.