கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில் ஜூன் மாதத்திற்கும் இலவச பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ள நிலையில் ஜூன் மாதத்திற்கு ரேஷன் பொருட்கள் தருவது தொடர்பாக தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில் விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்க ஏதுவாக ஜூன் 5ம் தேதி முதல் ரேஷன் கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜூன் 5ம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும், இதற்கு மாற்றாக ஜூன் 19ம் தேதி விடுமுறை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே மே 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை டோக்கன் விநியோகிக்கப்படும்.
மாநகராட்சி, நகராட்சியில் 1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள கடைகளில் கூடுதலாக ஒரு நபர் நியமிக்கப்பட வேண்டும். அனைத்து அத்தியாவசிய பொருட்களும் ஒரே தவணையில் வழங்க ஏதுவாக இருப்பு வைத்து கொள்ள வேண்டும். பொருட்கள் சீரான அளவில் கிடங்கில் இருந்து நகர்வு செய்யப்பட வேண்டும். பொருள் இல்லையென்றால் யாரையும் திருப்பி அனுப்பி வைக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஜூன் மாத இலவச ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் வரும் 29ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது.