Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

குட் நியூஸ் : 10, 12ஆம் வகுப்பு தேர்வு – புதிய உத்தரவு ….!!

பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்சி பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மத்திய மனிதவளத்துறை மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் தனது ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ள கருத்தில் 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தற்போது இருக்கும் ஊரிலேயே பொதுத் தேர்வை எழுதிக் கொள்ளலாம் என்று மத்திய மனித வளத்துறை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. சொந்த மாநிலத்தை விட்டு பிற மாநிலங்களில் இருக்கும் மாணவர்கள் தாங்கள் இருக்கும் ஊரிலேயே தேர்வு எழுதிக் கொள்ளலாம் என்று மத்திய மனித வளத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

Categories

Tech |