Categories
உலக செய்திகள் சற்றுமுன்

நான் ரெடியா இருக்கேன் ….! ”ட்ரம்ப் போட்ட ட்விட்” உற்றுநோக்கும் உலக நாடுகள் …!!

இந்தியா – சீனா எல்லை பிரச்சனையில் சமரசம் செய்து வைக்க தயார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வாரமாக இந்திய எல்லையில் சீனா அத்துமீறி நுழைந்து வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதேபோல இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டதோடு இந்திய எல்லையான லடாக் பகுதி அருகே சீனாவின் எல்லையோரம் சீனா தனது படைகளைக் குவித்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் தனது படைகளை அதிகரித்து வருகிறது.

இதனிடையே நேற்று பிரதமர் நரேந்திர மோடி முப்படை தளபதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதேபோல சீன அதிபர் ஜி ஜிங்பிங் அங்குள்ள ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா – இந்தியா எல்லை பிரச்சனையை நான் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று தெரிவித்தார்.

Retreating US, engaging China and rising India will mark the new ...

ஏற்கனவே இந்தியா – பாகிஸ்தான் பிரச்சனை ஏற்பட்டபோது, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா விரும்பினால் நான் தலையிட்டு மத்தியஸ்தம் செய்துவைக்க தயார் என சொல்லிய போது, இருநாட்டு பிரச்சனைகளில் மூன்றாவது நபராக யாரும் தலையிடக்கூடாது. நாங்களே பேசி தீர்த்துக் கொள்வோம். பாகிஸ்தான் தீவிரவாதத்தை கைவிடும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை கிடையாது என்று இந்தியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |