இந்தியா – சீனா இடையிலான கருத்து வேறுபாடுகளை நாங்களே தீர்த்து கொள்வோம் என சீன தூதர் சன் வெயிடாங் கூறியுள்ளார்.
இந்தியா – சீனா எல்லையில் லடாக் பகுதியில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எல்லையில் சீனா அதிகமான படைகளை குவித்து வந்தது. இதனால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தாக்கம் குறித்து சீன தூதர் சன் வெயிடாங் இன்று செய்தியாளர்களைசந்தித்து பேசினார்.
ஒவ்வொருக்கு மனிதனின் உயிரும் விலை மதிக்கத்தக்கது சீன மக்கள் கொரோனோவிற்கு எதிரான போரில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தார். கொரோனா வைரஸ் எல்லை, நாடு, மதம் என எதுவும் இல்லை. இந்தியா – சீனா கொரோனோவிற்கு எதிரான போரில் இணைந்து பணியாற்ற வேண்டும்.
இரண்டு நாடுகளுக்கும் இடையே மிக நீண்ட உறவு உள்ளது. நமக்குள் எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அந்த கருத்து வேறுபாடுகள் உறவுகளை பாதிக்கப்படுவதற்கு நாம் அனுமதித்து விடக்கூடாது. இரு நாட்டுக்கு இடையேயான பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதே சரியானது. இந்தியாவிற்கு சீனா மூலமாகவும், சீனாவிற்கு இந்தியா மூலமாகவோ எந்த விதமான அச்சுறுத்தலும் இல்லை என என சீன தூதர் சன் வெயிடாங் தெரிவித்துள்ளார்.