தமிழகத்தில் இன்று 567 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9,909 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 53.43% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,728ல் இருந்து 18,545ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 139 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 678 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று புதிதாக 588 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 8,500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 12,203ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி – 74, திருவள்ளூர் – 40, செங்கல்பட்டு – 31, திருவண்ணாமலை – 21 , காஞ்சிபுரம் – 14, தூத்துக்குடி – 7, மதுரை – 8, அரியலூர் – 5, திருவாரூர் – 5, விழுப்புரம் – 5, கடலூர் – 3, திருச்சி – 3 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 11,231 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 4,42,970 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.