Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…சிந்தனை மேலோங்கும்…உள்ளம் மகிழ்ச்சியடையும்…!

மீன ராசி அன்பர்களே…!     இன்று முயற்சிகளில் வெற்றிகிட்டும் நாளாக இருக்கும். இன்று முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். வாகனத்தை மாற்றலாம் என்ற சிந்தனை மேலோங்கும். தொலைபேசி மூலமான நற்செய்திகள் வந்து சேரும். எதிர்பார்த்தபடி வருமானம் கிடைக்கும். குடும்பத் தேவைகளையும் பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளுக்கு நல்ல வரன்களை அமைவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். எதிர்பார்த்த அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும். இன்று உறவினர் வகையில் உதவிகள் இருந்தாலும் சிறு சிறு மனஸ்தாபங்கள் சந்திக்கக்கூடும். மதியத்திற்கு மேல் தேவையில்லாத மனக் குழப்பம் உண்டாகும் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சீராகவே இருக்கும். உள்ளமும் மகிழ்ச்சி ஆகவே காணப்படும்.

தந்தையின் உடல்நிலையில் மட்டும் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். காதலர்களுக்கு இனிமையான நாளாக இருக்கும். எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக செல்லும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ள வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |