தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.சென்னையில் நேற்று புதிதாக 588 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 8,500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 12,203ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 2,252 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை மண்டலங்களை தொடர்ந்து அண்ணா நகரிலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 5,765 பேர் குணமடைந்துள்ள நிலையில் 93 பேர் உயிரிழந்துள்ளனர்.
மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை :
ராயபுரம் – 2,252
கோடம்பாக்கம் – 1,559
திரு.வி.க நகரில் – 1,325
அண்ணா நகர் – 1,046
தேனாம்பேட்டை – 1,317
தண்டையார் பேட்டை – 1,262
வளசரவாக்கம் – 777
அம்பத்தூர் – 504
அடையாறு – 672
திருவொற்றியூர் – 369
மாதவரம் – 264
பெருங்குடி – 212
சோளிங்கநல்லூர் – 208
ஆலந்தூர் – 165
மணலி – 168 பேர், மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட 93 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.