Categories
சென்னை மாநில செய்திகள்

கோயம்பேடு சந்தையை மீண்டும் திறப்பதற்கான இறுதிகட்ட நோய் தடுப்பு பணிகள் தீவிரம்!

கோயம்பேடு சந்தையை மீண்டும் திறப்பதற்கான இறுதிகட்ட நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையில் 3000 மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு காய்கறிகள், பூ, பழம் உள்ளிட்டவை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பல்வேரு மாநிலங்களில் இருந்து இங்கு காய்கறிகள் வரவழைக்கப்பட்டு மொத்த விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக ஏற்பட்டது.

சென்னை உட்பட 26 மாவட்டங்களில் கோயம்பேடு சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்தியது. சுமார் 2000 அதிகமானோருக்கு கோயம்பேடு சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதனால் மே 5ம் தேதி கோயம்பேடு சந்தை மூடப்பட்டு, திருமழிசையில் தற்காலி சந்தை அமைக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகின்றது.

மொத்த காய்கறி விற்பனை திருமழைசைக்கும் பூக்கடைகள் மாதரவரத்திற்கும் மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க ஆயத்த பணிகளை சிஎம்டிஏ நிர்வாகம் தொடங்கியுள்ளது. மே 20ம் தேதி முதற்கட்டமாக ஒவ்வொரு கடையிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

மூன்றடுக்கு உயர் ரக கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரங்கள் கொண்டு கோயம்பேடு சந்தை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்டமாக தீயணைப்பு வாகனங்கள் மூலமாக சோடியம் ஹைட்ரோகுளோரைடு கலந்து கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது
நோய் தடுப்பு பணிகள் அனைத்தும் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் பின்னர் அதிகாரிகள் கொண்ட குழு ஆய்வு செய்து கோயம்பேடு சந்தை மீண்டும் திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |