தமிழகத்தில் உணவுப் பொருட்கள் தடையின்றி கிடைக்கிறது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
பொதுமுடக்கத்தால் மக்கள் பாதிக்காத வகையில் 65 நாட்களுக்கு உணவுப்பொருள்கள் வழங்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட 845 பகுதிகளில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. 3 மாதங்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி விநியோகம் செய்யபட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா நெருக்கடி காலத்தில் முதல்வரின் உறுதியான நடவடிக்கையால் மக்கள் பாதிக்கப்படவில்லை என்றும் அசாதாரண சூழலில் முதல்வர் எடுத்த அதிரடி நடவடிக்கைக அனைவராலும் பேசப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மருத்துவர் நிபுணர் குழு அளிக்கும் ஆலோசனையின் படி முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
மேலும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்து அரசின் மீது குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார் என அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். ஒன்றிணைவோம் வா என்ற பெயரில் திமுகவினர் நாடகம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசு மக்களுக்காக ஒன்றுமே செய்ய வில்லை என்பது போல ஸ்டாலின் மற்றும் திமுகவினர் பேசி வருகின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார்.