இந்தியா சீனா இடையேயான எல்லை பகுதியில் மீட்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது..!
சர்வதேச அளவில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகை கொண்ட நாடுகளாக இந்தியாவும் சீனாவும் உள்ளன.
உலக அளவில் உற்பத்தி மையமாகவும் சந்தையாகவும் இந்த நாடுகள் விளங்குகின்றன.
நிலப் பரப்பளவில் சீனா மூன்றாவது பெரிய நாடாகவும் இந்தியா ஏழாவது பெரிய நாடாகவும் உள்ளது.
ராணுவ வலிமையை பொருத்தவரை இந்தியா நான்காவது இடத்திலும் சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளது.
உலக பொருளாதாரத்தில் சீனா இரண்டாம் இடத்திலும் இந்தியா ஐந்தாவது இடத்திலும் இருக்கிறது.
இரு நாடுகளும் 3,488 கிலோ மீட்டர் நீளம் கொண்ட எல்லையை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.
இந்தியா சீனா இடையே 1962-ம் ஆண்டு போர் சுமார் ஒரு மாதம் நீடித்தது.
போரின் முடிவில் ஜம்மு காஷ்மீரில் இந்தியாவின் ஒரு அங்கமாக இருந்த அக்சிய் சின் பகுதி சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது.
தொடர்ந்து 1967 ஆம் ஆண்டு நான்கு நாட்கள் மட்டுமே நடந்த போரின் முடிவில் சிக்கிம் மாநிலத்தை இந்தியாவின் அங்கமாக ஏற்றது சீனா.
அதேபோல் தீபத்தை சீனாவின் அங்கமாக ஏற்றது இந்தியா.
இந்த போருக்கு பிறகு இந்தியா சீனா இடையே இதுவரை போர் நடைபெறவில்லை.