Categories
மாநில செய்திகள்

சென்னையில் கள நிலவரத்துக்கு ஏற்ப சலூன் கடைகளை திறக்கப்படும் – நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

சென்னையில் கள நிலவரத்துக்கு ஏற்ப சலூன் கடைகளை திறக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலை காரணமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் சலூன் கடைகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் சலூன்களை திறக்கக் கோரி முடித்திருத்துவோர் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில் வருவாய் இல்லாமல் இருக்கும் சலூன் தொழிலாளர்களுக்கு தலா ரூ.30,000 வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ரவிச்சந்திர பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் மே 3ம் தேதி முதல் சென்னை தவிர தமிழகம் முழுவதும் சலூன் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறித்து சுட்டி காட்டப்பட்டது. மனுதாரர் தரப்பில் சென்னையில் பல்வேறு கடைகள் திறக்க அனுமதி அளித்துள்ள போதிலும் சலூன் கடைக்கல் திறக்க அனுமதி வழங்கப்பட வில்லை,

எனவே சென்னையில் சலூன் கடைகள் திறக்க அனுமதி அளிக்குமாறு உத்தரவிட வவேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து சென்னையில் கள நிலவரங்களை ஆய்வு செய்து சலூன் கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார். இந்த வழக்கு ஜூன் 8ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |