Categories
மாநில செய்திகள்

எதிர்க்கட்சிகளின் செயல்களை பாராட்ட வேண்டாம், இப்படி குற்றம் சாட்டலாமா? – டி.கே.எஸ். இளங்கோவன்!

ஒன்றிணைவோம் வா என்ற பெயரில் திமுகவினர் நாடகம் நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேட முயற்சி என அமைச்சர் காமராஜ் குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்து பேசிய டி.கே.எஸ். இளங்கோவன் எதிர்க்கட்சிகளின் செயல்களை பாராட்ட வேண்டாம், இப்படி குற்றம் சாட்டலாமா? என கேள்வி எழுப்பியுள்ளார். தி.மு.க. செயல் திட்டங்களை வரவேற்க வேண்டும்.

சிக்கலான சூழ்நிலையில் அரசு செய்ய வேண்டிய பணிகளை எதிர்க்கட்சி மேற்கொள்கிறது செயல்படுகிறதே என்று எங்களுக்கு மகிழ்ச்சி தான் என கூறியுள்ளார். அரசு சரியாக செய்து இருந்தால் மக்கள் எங்களை ஏன் அணுகுகிறார்கள்? என கூறிய அவர் இந்த அளவிற்காவது தமிழக அரசு செயல்படுகிறதே என்று எங்களுக்கு மகிழ்ச்சி தான் என்றும் கொரோனாவை வைத்து ஆளும் அரசு அரசியல் செய்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்பதே தி.மு.க. தலைவரின் நோக்கம். தி.மு.க. செயல் திட்டங்களை வரவேற்க வேண்டும். நீங்கள் மதுக்கடைகளை மூடிவிட்டால் எங்கள் கட்சியினர் மது ஆலைகளை மூடி விடுவார்கள். அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை அரசு நிராகரித்தது. தி.மு.க. கொடுத்த மனுக்களை வைத்து ஒரு சில ஆட்சியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர் என டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

Categories

Tech |