Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 19,000ஐ கடந்தது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு 19,000ஐ கடந்துள்ளது.

தினமும் மாலை கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.. இந்நிலையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,545ல் இருந்து 19,372 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று புதிதாக 559 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 12,762 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 639 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 10,548 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் தமிழகத்தில் இன்று 12 பேர் பலியாகியுள்ளனர்.. இதனால் தமிழகத்தில் பலி எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகத்தில் ஓட்டு மொத்தமாக 8,676 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்..

Categories

Tech |