ரிஷப ராசி அன்பர்களே …! இன்று குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வரக்கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
இன்று அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாட்களாக வரவேண்டிய பணம் வந்துசேரும். அறிவு, திறமை வெளிப்படும் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். அடுத்தவரின் குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். கவனமாக இருங்கள் மற்றவர்களைப்பற்றி தயவுசெய்து குறை மட்டும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். இன்று நிதி மேலாண்மை சீராக இருந்தாலும் பண விஷயத்தில் கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுங்கள்.
இன்று காதலர்கள் சில விஷயத்தை பேசும் போது கொஞ்சம் கவனமாக பேச வேண்டும். நிதானமாக கையாள வேண்டியிருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.