Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு…அன்பு கூடும்…நிதானம் தேவை…!

கடக ராசி அன்பர்களே …!     இன்று கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் வழியே வந்து பேசுவார்கள் கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். விலை உயர்ந்த ஆடை ஆபரணம் வாங்கும் வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய அத்தியாயம் தொடங்கும் நாளாக இருக்கும்.

குடும்ப நலனில் அக்கறை காட்டுவீர்கள். பேசும்பொழுது நிதானத்தை மட்டும் கடைபிடியுங்கள். தூரத்தில் இருந்து வரும் செய்திகள் மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கும். உறவினர் வகையில் அன்புத் தொல்லைகள் இருக்கும். காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருந்தாலும் எப்பொழுதும் போலவே பேசும்போது நிதானத்தைக் கடைபிடியுங்கள்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் மஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். மேலும் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |