தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.சென்னையில் நேற்று புதிதாக 559 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 12,762 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 6,229 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 2,324 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை மண்டலங்களை தொடர்ந்து அண்ணா நகரிலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 6,330 பேர் குணமடைந்துள்ள நிலையில் 102 பேர் உயிரிழந்துள்ளனர்.
மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை :
ராயபுரம் – 2,324,
கோடம்பாக்கம் – 1,646,
திரு.வி.க நகரில் – 1,393,
அண்ணா நகர் – 1,089,
தேனாம்பேட்டை – 1,412,
தண்டையார் பேட்டை – 1,322,
வளசரவாக்கம் – 794,
அடையாறு – 719,
திருவொற்றியூர் – 377,
மாதவரம் – 280,
பெருங்குடி – 217,
சோளிங்கநல்லூர் – 219,
ஆலந்தூர் – 178,
அம்பத்தூர் – 516,
மணலி – 175 பேர், மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட 101 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.