Categories
மாநில செய்திகள்

பயிர் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள ரூ. 54.46 லட்சம் நிதி ஒதுக்கி முதல்வர் பழனிசாமி உத்தரவு!

மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதலை தடுக்க நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதலை தடுக்க பயிர்ப் பாதுகாப்புப் பணிக்காக 54 லட்சத்து 46 ஆயிரம் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ஹெக்டருக்கு 1,750 ரூபாய் வீதம், 3,112 ஹெக்டரில் பயிர் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

நாமக்கல், சேலம், ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளி பயிர்களில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்றி மரவள்ளி சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க தோட்டக்கலைத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் புதிய கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்துள்ளார். செங்கல்பட்டு மேலக்கோட்டையூரில் ரூ.6.97 கோடியில் கட்டப்பட்ட சைக்கிளிங் வெலோடிரம், நிர்வாக கட்டிடத்தையும் திறந்து வைத்துள்ளார். உதகையில் ரூ.4.84 கோடியில் கட்டப்பட்ட ஆறு வரிசைசைகள் கொண்ட செயற்கை இழை ஓடுதளப் பாதையையும் முதல்வர் திறந்து வைத்துள்ளார். காஞ்சிபுரத்தில் ரூ.15.62 கோடியில் நவீன விளையாட்டு வளாக கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.

Categories

Tech |