கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழக அரசு எதுவுமே செய்யவில்லை. அரசியல் மட்டும் செய்கிறது என்று திமுக தலைவர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்திய பின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து புட்டு புட்டு என விளக்கம் அளித்தார்.
திமுக தலைவர் முக .ஸ்டாலின் அரசு எதுவும் செய்யவில்லை, கொரோனாவை கட்டுப்படுத்த அரசியல் தவறி விட்டது என்று குற்றம் சாட்டி வந்த நிலையில் அனைத்திற்கும் பதிலளிக்கும் வகையில் புட்டு, புட்டு என்று விளக்கம் அளித்தார்.
முதல்வர் பேசியது,
தமிழகத்தை பொறுத்தவரை நோய் பரவலை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
22.01.20 – மருந்துபோல் கொள்முதல் செய்வதற்கு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
31.01.20 – மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு பணி ஆணை வழங்கப் பட்டது.
பிப்ரவரி முதல் வாரம் – மருந்து வாங்குவதற்கு பணி ஆணை வழங்கப்பட்டது. இதற்காக 146 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
23.01.2020 – வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் வருபவர்களை பரிசோதனை துவக்கப்பட்டது.
07.03.20 – தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றிய முதல் முதலில் கண்டறியபட்டது.
15.03 2020 – திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், மதுரை மற்றும் பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் முதல்கட்டமாக தனிமைப்படுத்தப்பட்டு வசதிகள் துவங்கப்பட்டது.
15.03 .20 – பொது இடங்களில் கூடுவதை தவிர்க்கவும், எல்லையோர மாவட்டங்களில் திரையரங்குகள், மால்கள் மூட உத்தரவிட்டது.
15.03.20 – மழை பள்ளிகள், தொடக்க பள்ளிகள் மூட உத்தர விடபட்டது.
16.03.20 – மாநில எல்லைகள் பரிசோதனை பணி துவங்கப்பட்டது.
23.03.20 – தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வெளியிடப்பட்டடு, 24.03 மாலை 6 மணி வரை அமல்படுத்தப்பட்டது.
25.03.20- 21 நாட்களுக்கு மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து, அதனை அரசு கடைபிடித்தது.
15.04 2020 முதல் 3.05.2020 வரை இரண்டாவது ஊரடங்கு பின்பற்றப்பட்டது.
4.05. 2020 முதல் 17.05.2020 வரை மூன்றாவது ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்யப்பட்டது.
18.05.20 முதல் 31.05.2020 வரை நான்காவது ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்ய பட்டு இருக்கிறது.
மாநில பேரிடர் மேலாண்மை குழு சார்பில் 14 கூட்டங்கள் நடத்தப்பட்டு இருக்கின்றன.
மாண்புமிகு பாரத பிரதமர் உடன் 5 முறை கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
மாவட்ட ஆட்சித் தலைவருடன் காணொலி காட்சி மூலம் 6 ஆய்வு கூட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன.
12 ஒருங்கிணைப்புக் குழுவுடன் 3 கூட்டங்கள் நடத்தப் பட்டுள்ளன.
தலைமைச் செயலாளர் தலைமையில் 4 முறை டாஸ்க் போர்ஸ் மீட்டிங் நடத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சித் தலைவருடன் தலைமைச் செயலாளர் 6 முறை கலந்தாலோசித்துள்ளார்.
தலைமை செயலாளர் தலைமையில் அனைத்து மத தலைவர் உடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன.
மருத்துவ வல்லுநர்கள் மற்றும் பொது சுகாதாரத் துறை அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் 3 முறை நடைபெற்றிருக்கின்றன.
இந்திய மருத்துமுறை மருத்துவருடன் 1 முறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
மார்ச் மாத இறுதியில் 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள், 1,500 ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
13.04. 2020 அன்று 334 சுகாதார ஆய்வாளர்கள் 2815 பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1323 செவிலியர்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டு பணி நியமனம் வழங்கப்பட்டு, உடனடியாக பணியில் சேர அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள்.
08.05. 2020 முதல் 2570 செவிலியர்கள் 6 மாத ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டது.
31.03. 2020 மற்றும் 30.04 2020 ஓய்வுபெறும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவத் தொழில் நுட்ப பணியாளர்களுக்கு இரண்டு மாத காலம் ஒப்பந்த முறையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது.
12 மண்டல அளவிலான மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் களப்பணிகள் ”சிறப்பு பணிக்குழு” என்று ஒருங்கிணைப்பு செய்யப்பட்டுள்ளது.
23.04.2020- தமிழ்நாட்டில் சில தொழிற்சாலைகள் படிப்படியாக அனுமதிப்பது தொடர்பாகவும், நோய்த்தொற்று பரவாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
16.04.20 – ஊரடங்கு உத்தரவு தளர்வு குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
29.04.20 – சென்னை கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் நோய் தொற்றை கண்காணிக்க இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள், இந்திய காவல் பணி அதிகாரிகள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அடங்கிய 15 குழுக்கள் அமைக்கப்பட்டது.
05.05.20 – சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில் சென்னை மாநகராட்சி வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
வெளிநாடுகள் வெளிமாநிலங்கள் சிக்கியுள்ள தமிழர்களை தமிழ் நாட்டுக்கு அழைத்துவர கூடுதல் தலைமை செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர் தலைமையில் குழுக்களும், பிரத்யேகமான வலைத்தளமும் உருவாக்கப்பட்டது.
இதுவரை 2 லட்சத்து 47 ஆயிரத்து 561 வெளிநாட்டு தொழிலாளர்கள் 170 ரயில் மூலம் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டன, அனைத்து பயணச் செலவும் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டது.
2218 வெளிநாட்டு வாழ் தமிழர்கள் விமானம் மூலமாகவும், கப்பல் மூலமாகவும் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர்.
04.05.20 – கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தவிர (பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட ) பிற மாவட்டங்களில் தொழிற்சாலைகள், சேவைகள், தணிக் கடைகள் இதர அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட உரிய நெறிமுறைகளுடன் அனுமதி கொடுக்கப்பட்டது.
11.05.20 – 34 விதமான கடைகளுக்கு செயல்பட உரிய நெறிமுறைகளுடன் அனுமதிக்கப்பட்டது.
10.05. 20 – திருமழிசையில் மொத்த காய்கறி சந்தை தற்காலிகமாக செயல்பட துவங்கப்பட்டுள்ளது.
19.05.2019 – சென்னை மாநகராட்சி காவல் எல்லை தவிர பிற பகுதிகளில் முடி திருத்தும் நிலையம், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.
20.05.2020 – வாரியத்தில் பதிவு செய்யப்படாத தமிழ்நாடு கைத்தறி மாற்று கைத்தறி பட்டு நெய்யும் நெசவாளர்களுக்கு 2000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
25.05.2020 – சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நோய்க்கட்டுப்பாடு பகுதிகளை நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க புதிய குழுக்கள் அமைக்கப்பட்டன.
23 5 2019 – சென்னை மாநகராட்சி காவல் எல்லை தவிர ஆட்டோ ரிக்ஷா இயக்க அனுமதி வழங்கப்பட்டது.
25.05.2020 – சென்னை பெருநகர எல்லைக்குட்பட்ட கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் 25 சத தொழிலாளர்கள் கொண்டு செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.
களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளும் அரசு மேற்கொண்டது.
களப் பணியாளர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு உபகரணங்கள் முகக் கவசங்கள் கையுறைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
களப்பணியாளர்களுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்காமல் அரசே ஏற்பாடு செய்துள்ளது.
தூரதிஷ்டவசமாக நோய்வாய்ப்பட்டு இருப்பவர்களுக்கு நிதி வழங்கப்படுகின்றது.
நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்காக கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு கபசர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து கள பணியாளர்களும் ஜிங் மாத்திரைகள் மற்றும் மல்ட்டி வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
24.03.2020 – ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு 3280 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு நிவாரணத் திட்டம் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட் டது.
2 கோடியே ஒரு லட்சம் அரிசி அட்டைதாரர்களுக்கு ஏப்ரல் மாத அரிசியுடன் ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ சமையல் எண்ணெய் விலையின்றி வழங்கப்பட்டது.
மே மாதத்திற்கான 2 கோடியே ஒரு லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசி வாங்கிய குடும்ப அட்டைதாரருக்கு 50 கிலோ அரிசி வழங்கப்பட்டது.
அதே போல எண்ணெய், பருப்பு, சர்க்கரை விலை இல்லாமல் வழங்கப்பட்டது.
ஜூன் மாதத்திற்கும் அதேபோல் நான்கு பேர் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 50 கிலோ அரிசி, சர்க்கரை, எண்ணெய், பருப்பு விலை இல்லாமல் வழங்கப்படும்.
ஜூன் மாதத்திற்கான டோக்கன் மே 29,30,31 ஆகிய தேதிகளில் வழங்கப்பட்டு, ஜூன் 1 முதல் குடும்பங்களுக்கு அரிசி ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படும்.
24 லட்சம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கு உலர் ஊட்டச்சத்து முன்னேற்பாடாக வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் நல வாரியத்தை சேர்ந்த 35 லட்சத்து 65 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கு 2 தவணையாக ஆயிரம் ரூபாய் ரொக்கமாக நிவாரணம் வழங்கப்பட்டது.
முதல் தவணை 89% வழங்கப்பட்டது, இரண்டாவது தவணை 82% வழங்கப்பட்டது.
16.05.20 – முடிதிருத்தும் நல வாரியத்தில் பதிவு செய்யாத முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு இரண்டு தவணைகள் நிவாரணம் 2000 ரூபாய் வழங்கப்படுகிறது ( விடுபட்டவர்களுக்கு)
அனைத்து வெளிமாநில தொழிலாளர்களுக்கும் அத்தியாவசிய உணவுப்பொருட்கள், நிவாரணம் விலையில்லாமல் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் வழங்கப்பட்டது.
பட்டாசு தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரியும் ESI தொழிலாளர்கள் 21 ஆயிரத்து 720 பேர் எங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்தார்கள், அவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது
அம்மா உணவகங்கள் மூலமாக தினமும் ஏழை எளியோர் 7 லட்சம் பேருக்கு சுகாதாரமான உணவு வழங்கப்பட்டது.
250க்கும் மேற்பட்ட சமுதாய உணவுக் கூடங்கள் அமைக்கப் பட்டு, தினசரி சராசரியாக 1.5 லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை ஆதரவற்றோர், முதியவர், வெளிமாநில தொழிலாளர்கள், மாற்றுத் திறனாளிகள் பயன் பெற்று வருகின்ற வகையில் உணவு வழங்கப்பட்டுள்ளது
நோய் தாக்கத்தின் பின் குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து வெளியேறும் ஜப்பான், தென்கொரியா, தைவான், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தொழில் நிறுவனங்களை தமிழகத்துக்கு ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.
RBI முன்னால் ஆளுநர் டாக்டர் ரங்கராஜன் தலைமையில் பொருளாதார மீட்பு உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.
சிறுகுறு தொழில் நிறுவனங்கள் கடன், வேளாண் பயிர் கடன், கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெற்ற கடன்கள், மீனவர் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்த மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுட்டது.
சொத்து வரி, குடிநீர் வரி ஆகியவற்றை செலுத்த மூன்று மாதம் காலம் அவகாசம் வழங்கப்பட்டது.
இடைநிலை மூலதன கடன் உதவி 22 உழவர் உற்பத்தியாளர் நிறுவங்களுக்கு 2.50 லட்சம் மதிப்பீட்டில் வழங்க ஆணை இடப்பட்டுள்ளது.
ஊரக தொழில் மேம்பாட்டிற்காக கொரோனா சிறப்பு நிதி உதவித் தொகை திட்டம் 300 கோடி ரூபாய் நிதி வழங்குவதற்கு ஆணையிடப்பட்டுள்ளது.
மருத்துவ உபகரணங்களின் தற்போதைய கையிருப்பு வெண்டிலேட்டர் எண்ணிக்கை 3371 இருக்குது.
அரசில் 2501 இதில் 501 புதிதாக வாங்கப்பட்டது. தனியாரிடம் 870 இருக்கின்றது.
ஒரு கோடியே 34 லட்சம் மூன்றடுக்கு முகக்கவசம் வரவழைக்கப்பட்டது. கையிருப்பு 32 லட்சம் உள்ளது.
N95 முகக் கவசங்கள் 20 லட்சம் வாங்கினோம், தற்போது கையிருப்பு 3 லட்சம் இருக்கின்றது.
பிபி எனப்படும் முழு உடல் பாதுகாப்பு கவசங்கள் 9.5 லட்சம் வாங்கப்பட்டது. கையிருப்பு 3 லட்சம் உள்ளது.
9.1 லட்சம் ஆய்வக உபகரணங்கள் (PCR) வரப்பட்டது, கையிருப்பு 1.7 லட்சம் இருக்குது.
அரசைப் பொருத்த வரைக்கும் வேகமாக துரிதமாக அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு இருக்கிறது
தமிழ்நாட்டில் அரசு சார்பாக 42 ஆய்வக பரிசோதனை மையங்களும், தனியார் சார்பில் 28 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, மொத்தம் பரிசோதனை மையம் 70 இயங்கி வருகின்றது.
70 மையங்களில் நாளொன்றுக்கு இன்றைக்கு 12 ஆயிரத்துக்கும் குறையாமல் பரிசோதனை செய்யப்பட்டு இருக்கின்றன.
கொரோனா சிகிச்சைக்கான பிரத்யேக அரசு மருத்துமனை 23, கொரோனா சிகிச்சைக்கான தனிமைப்படுத்தப்பட்ட அரசு மருத்துமனை 188 பயன்பாட்டில் இருக்கின்றன.
சிகிச்சைக்கான தனிமைப்படுத்தப்பட்ட பிரிவு கொண்ட தனியார் மருத்துவமனைகள் 169 செயல்பட்டு வருகின்றன.
தனிமைப்படுத்தப்பட்ட படுக்கையில் எண்ணிக்கை 35 ஆயிரத்து 646.
தீவிர சிகிச்சை பிரிவு படுக்கையின் எண்ணிக்கை 4018,
இதுவரை பரிசோதிக்கப் 4 லட்சத்து 45 ஆயிரத்து 216 பேருக்கு பரிசோதனை செய்ய பட்டுள்ளது.
நோய்த்தொற்று உறுதி செய்பவர்கள் எண்ணிக்கை 19 ஆயிரத்து 372 பேர்
தீவிர கண்காணிப்பில் உள்ளவர்கள் 89 ஆயிரத்து 82 பேர்,
சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி வந்து எண்ணிக்கை 10,54 இது 54.4 சதவீதம் ஆகும்.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 145. இது 0.7% ஆகும்.
அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு எவ்வித தடையும் இல்லாமல், கிடைக்கக் கூடிய சூழ்நிலையை அரசு உருவாக்கித் தந்திருக்கின்றன.
காய்கறிகள் மக்களுக்கு இன்றைக்கு எல்லா பகுதிகளிலும் எளிதாக கிடைக்கக் கூடிய சூழ்நிலையை நம்முடைய வேளாண்துறை அதிகாரிகள் செய்துள்ளார்கள்.
முதல்வரின் இந்த விளக்கம் திமுகவின் அனைத்து குற்றச்சாட்டுகளையும் சுகுசுக்காக நொறுக்கியுள்ளது.