கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கானது நிறைவடைய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்படுமா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிரதமர் மோடியிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். பல்வேறு மாநில முதல்வர்களுடன் அமித்ஷாவிடம் கருத்து தெரிவித்தது குறித்து மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மே 31ம் உடன் முடியும் ஊரடங்கை மேலும் 15 நாள் நீடிக்க கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் நாடு முழுவதும் மேலும் 15 நாட்கள் ஊரடங்கு நீடிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கோவா முதல்வர் தகவல் அளித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் கொரோனோவால் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 9வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.