தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் 8 மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, தென்காசி, கன்னியாகுமரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நெல்லை மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால் மே 31ம் தேதி முதல் ஜூன் 5ம் தேதி வரை அரபிக் கடலில் ஆழ்கடல் பகுதிக்கு மீன்வர்கள் செல்ல வேண்டாம்.
அடுத்த 48 மணி நேரத்துக்கு மணிக்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் குமரிக்கடல், மாலத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருத்தணியில் 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.