மிதுன ராசி அன்பர்களே …! இன்று விவாதங்கள் ஏற்படும் நாளாக இருக்கும். அலைச்சல் கொஞ்சம் இருக்கும். விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் அதிகமாகும். கொடுக்கல் வாங்கலில் விழிப்புணர்ச்சியுடன் இருங்கள். சில நேரங்களில் பகையாளர்களிடம் பேசும்போது கொஞ்சம் கவனம் வேண்டும். இன்று செயலில் இருந்து வந்த மந்த நிலையில் நீங்கி சுறுசுறுப்பான செயல்பாடுகள் உருவாகும்.
காரியத்தடை தாமதம் கொஞ்சம் ஏற்படும். புதிய முயற்சிகள் தள்ளிப் போடுவதும் கவனமாக செயல்படுவதும் நல்லது. குடும்ப பிரச்சினைகள் ஓரளவு கட்டுக்குள் இருந்தாலும் நீங்கள் பேசும்போது நிதானத்தைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். எதுவும் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்ற முரட்டு தைரியம் எப்பொழுதுமே வேண்டாம். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியம் காட்டவேண்டாம். பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டு பின்னர் சரியாகும்.
இன்று காதலர்களுக்கு இனிமையான நாளாக இருந்தாலும் எப்போதும் சொல்வது போலவே வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். அனைத்து விஷயங்களுமே உங்களுக்கு நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் அடர் நீல நிறம்.