Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…சிந்தனை மேலோங்கும்…காரியத்தடை ஏற்படலாம்…!

விருச்சிக ராசி அன்பர்களே…!     இன்று அதிகளவில் வசதிகள் பெருகும் நாளாக இருக்கும். தொட்ட காரியங்கள் வெற்றியை கொடுக்கும். இடம் பூமி வாங்கக் கூடிய எண்ணங்கள் மேலோங்கும். கல்யாணக் கனவுகள் நனவாகும். தொழில் மாற்றச் சிந்தனை மேலோங்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் இருந்து கொண்டே இருக்கும். கல்வியில் எப்படி முன்னேறிச் செல்லலாம் என்ற எண்ணங்கள் அதிகரிக்கும். கவனமாக எதையும் செய்யுங்கள் எதிலும் எச்சரிக்கையாக இருங்கள்.

காரியத்தடை தாமதம் கொஞ்சம் வரலாம். பின்னர்தான் உங்களுடைய காரியங்களில் வெற்றி இருக்கும். அனைவரையும் அனுசரித்துச் சென்றால் அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மிக முக்கியமாக கணவன் மனைவியின் எப்பொழுதும் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். நிதானமாகப் பேச வேண்டும். இறை வழிபாட்டுடன் காரியத்தை எதிர்கொள்ளுங்கள் மிக சிறப்பாக நடக்கும். கண்டிப்பாக மனைவியிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.

அது போலவே காதலும் கொஞ்சம் கவனமாக நடந்துகொள்ள வேண்டும். எதைப்பற்றியும் பேசாமல் இருப்பது ரொம்ப நல்லது. பொறுமை காப்பது ரொம்ப ரொம்ப நல்லது. அதேபோல மற்றவர் பார்வையில் படும்படி எப்பொழுதும் பணத்தை எண்ண வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அடர் நீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் அடர் நீல நிறம்.

Categories

Tech |