இந்தியா – சீனா எல்லை பிரச்சனை இருக்கிற இந்த தருணத்தில் உலக அரசியல் நிபுணர்கள் ஓநாய் போர் வீரர்களை பற்றி பேசிகிட்டு இருக்காங்க. அதாவது (wolf warrior) என்று ஆங்கிலத்தில் இவர்கள் அறியப்படுகிறார்கள்.
யார் இந்த ஓநாய் போர்வீரர்கள் ?
சீனாவின் புதிய அரசியல் தந்திரம் ஓநாய் போர் வீரர்கள். இவர்கள் போர்க்களத்திற்கு நேரடியாக வர மாட்டார்கள். இவர்கள் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் இந்த மாதிரியான சமூக வலைத்தளத்தில் போர்வீரர்களை போல் சீனாவில் செயல்பட்டு வருகிறார்கள். அதாவது சீனாவை விமர்சிக்கும் நாடுகளை இவர்கள் கண்டபடி விமர்சனம் செய்வார்கள். சீனாவில் இவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கிறது.
என்னடா..! இப்படி ஒரு மறைமுக யுத்தத்தை சீனா நடத்திக் கொண்டிருக்கிறது என்று அனைவரும் ஆச்சரியப்படவைக்கும்.
பேஸ்புக், டுவிட்டர் இதுவெல்லாம் சீனாவுக்கு கொஞ்சம் புதுசா ஆச்சே. ஏற்கனவே போர்க் களத்தில் நிற்பது, எல்லைகளை ஆக்கிரமிப்பது, அத்துமீறுவது தானே சீனாவுக்கு பழக்கப்பட்ட ஒன்று. இது என்ன புதிய ஓநாய் போர் வீரர்கள் என்று உலகம் முழுவதும் உள்ள அரசியல் நிபுணர்கள் பேசிக்கொண்டு இருக்கும் இந்த தருணத்தில் உண்மையிலேயே சீனா அத்துமீறி விட்டது, எல்லையைத் தாண்டி வந்து விட்டது. அதாவது திடீரென முளைத்த ஓநாய் போர் வீரர்களால் சீனா மீது மற்ற நாடுகள் சந்தேகம் கொண்டது.
இந்தியாவை உரசிய சீனா – மோதல் நடந்தது எங்கே ?
பல இடங்களில் இந்த மோதல் போக்கை சீனா கையாண்டு இருக்கிறது. லடாக் பகுதி : ஜம்மு-காஷ்மீருக்கு பக்கத்துல உள்ள யூனியன் பிரதேசம் தான் இந்த லடாக்.இது 4 ஆயிரத்து 270 மீட்டர் உயரம் ( 14,000 ) அடி. இவ்வளவு உயரத்துல இருக்குற பகுதியில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் சண்டை நடந்துள்ளது. சீனாவின் ராணுவ வீரர்கள் இந்தியாவின் எல்லை உள்ளே வந்துட்டாங்க.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் மிகப்பெரிய எல்லை. இதுதான் பார்டர் என ரொம்ப தெளிவா எல்லாம் தெரியாது. ஏனென்றால் இமயமலை பகுதி, இங்கு பல இடங்களில் மனிதர்கள் உயிர் வாழ தகுதி இல்லாத இடங்கள். அங்கே இந்த இரண்டு ராணுவமும் பல நேரம் மோதிக் கொள்வார்கள். காரணம் இதுதான் எல்லை என்று தெளிவாகத் தெரியாது. இருப்பினும் சீனாவுக்கு ஓரளவுக்கு தெரியும்.
அப்படி இருந்தும் வேண்டுமென்றே பல கிலோமீட்டர்கள் உள்ளே நுழைந்து சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றாக போய்விட்டது.
லடாக்கில் நடந்த அத்துமீறலுக்கு பிறகு மூன்று நாட்கள் கழித்து சுமார் 1,200 கிலோ மீட்டர் தொலைவில் மீண்டும் அத்துமீறலில் சீன ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.சீக்கிம் மாநிலத்தின் நாதுல்லா பாஸ் என்கின்ற எல்லைப் பிரச்சினை வந்திருக்கிறது. சீனா அங்கேயும் அத்துமீறி இருக்கின்றது.
எல்லையில் படைகளை குவிக்கும் சீனா – இந்தியா :
இரு நாட்டு எல்லையிலும் வழக்கமாக தென்படுற முகாம்களை விட ராணுவ முகாம்கள் அதிக அளவில் சீனா பகுதிகளிலும், இந்தியா பகுதிகளிலும் தென்படுகின்றது அப்படின்னு சர்வதேச அறிஞர்கள் சொல்கிறார்கள். இந்தியா சீனாவிற்கான எல்லை சுமார் 3500 கிலோமீட்டர் நீளம் கொண்டது.
கொரோனாவுக்கு காரணமே சீனாதான் என்ற அவப்பெயரை திசைதிருப்ப இந்தியாவுடன் மோதுகிறது சீனா என்று சர்வதேச அரசியல் நிபுணர்கள் சொல்லி இருக்காங்க . ஏற்கனவே இருக்கும் ஒரு குற்றச்சாட்டை மறைக்க வேண்டுமாயின் வேறு ஒரு புதிய பிரச்சினையை உருவாக்கி விட்டால் மக்கள் இந்த பிரச்சனையை பற்றி அதிகம் பேச மாட்டாங்க, இதன் காரணமாக சீனா இந்தியாவுடன் உரசுகிறது.
உலக நாடுகள் எல்லாம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லை பிரச்சனை , எல்லை பிரச்சனை என்று பேசுவார்களே தவிர, கொரோனாவுக்கு காரணமே சீனாதான் அப்படின்னு அமெரிக்கா ஒருபக்கம் சொல்லிக்கொண்டிருக்கிறது. இதில் மக்களுடைய கவனம் சிதறிவிடும். புதிதாக கவனம் இந்திய எல்லையில் போர் பதற்றம், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தயார் என்கிறாள் இப்படியே செய்தி வந்து கொண்டு இருக்கையில், கொரோனாவுக்கு காரணம் சீனா தான் அப்படின்னு உலகநாடுகள் மறந்துவிடும்.
இதன் காரணமாகத்தான் இப்படி இந்தியாவை உரசி பார்க்கிறது சீனா அப்படின்னு சொல்லி உலக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது