Categories
மாநில செய்திகள்

சென்னையில் வரும் நாட்களில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

சென்னை புளியந்தோப்பில் 1,700 படுக்கைகளுடன் தயாரான கொரோனா சிறப்பு வார்டுகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க வரும் நாட்களில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும் என கூறியுள்ளார்.

சென்னையில் கொரோனா சிகிச்சையில் தாமதம் ஏற்படாமல் இருக்க கூடுதலாக 10 இடங்களில் பரிசோதனை நடத்த முடிவு செய்யபட்டுள்ளது. காய்ச்சல் அறிகுறியுடன் வருபவர்களுக்கு சென்னையில் 140 நகர்ப்புற சுகாதார மையங்களில் பரிசோதனை நடைபெற்று வருகிறது. 1,400 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு வீட்டில் இருக்கும் உணர்வை ஏற்படுத்தும் வகையில் புளியந்தோப்பில் சிகிச்சை அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதை பற்றி மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் சமூக பரவல் இல்லாத நிலையை ஏற்படுத்த அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சிசிடிவி கேமரா மூலம் 24 மணிநேரமும் கண்காணிக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது, சிகிச்சை மையத்தில், சிறப்பு மருத்துவ குழு முழுநேரமும் செயல்படும். கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.

Categories

Tech |