Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு சாத்தியம் இல்லை – அமைச்சர் செங்கோட்டையன்!

ஈரோடு கோபிச்செட்டி பாளையத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை அமைச்சர் செங்கோட்டையன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், தமிழகத்தில் இப்போதைக்கு பள்ளித்திறப்பு சாத்தியம் இல்லை என கூறியுள்ளார். பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையிலான குழு முடிவு செய்யும் என அவர் தகவல் அளித்துள்ளார்.

வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும். கொரோனா பாதிப்பு நீடிப்பதால் பள்ளி திறப்பு ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி போக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்க சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும்,

காலை, மதியம் என இரண்டு வேளைகளில் வகுப்புகளை பிரித்து நடத்த உள்ளதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன் தற்போது பள்ளிகள் திறக்கும் திட்டமில்லை என கூறியுள்ளார். மேலும் பாடங்களை குறைப்பது குறித்து ஆய்வு செய்ய 16 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இடஙக உயர்மட்ட குழு அறிக்கை தாக்கல் செய்த பின் பாடங்கள் குறைப்பு பற்றி முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |