தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அரபிக் கடலின் தென் கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக சாதகமான வாய்ப்புகள் உள்ளன.
இதனால் நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது என தகவல் அளித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மேலும் மன்னார் வளைகுடா மற்றும் மாலத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் 40 – 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.
இதனால் அடுத்த 48 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தென்கிழக்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1ம் தேதி தொடங்குவதற்கான சூழ்நிலை தற்போது நிலவுகிறது என வானிலை மையம் தெரிவித்தது. வேலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் திருத்தணியில் 106 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும் என கூறப்பட்டுள்ளது.