Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம் – முன்பதிவு தொடங்கியது!

ஜூன் 1ம் தேதி முதல் இயக்கப்பட உள்ள சிறப்பு ரயிலுக்காக டிக்கெட் முன்பதிவு மதுரை, ஈரோட்டில் தொடங்கியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி முதல் 4 வழித்தடங்களில் ஏசி இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. கோவை – மயிலாடுதுறை (திருப்பூா், ஈரோடு, கரூா், திருச்சி, தஞ்சை, கும்பகோணம் நிலையங்களில் நிற்கும். செவ்வாய்க்கிழமையில் ரயில் இல்லை.),

மதுரை – விழுப்புரம் (திண்டுக்கல், திருச்சி, அரியலூா்) இன்டா்சிட்டி விரைவு ரயில், திருச்சி – நாகா்கோவில் (திண்டுக்கல், மதுரை, விருதுநகா், திருநெல்வேலி) விரைவு ரயில், கோயம்புத்தூா் – காட்பாடி (திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை) விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மதுரை ரயில் நிலையத்தில் 12 கவுண்டர்களில் 2 கவுண்டர்கள், ஈரோடு ரயில் நிலையத்தில் 2 கவுண்டர்களில் முன்பதிவு டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது.

கோவை – மயிலாடுதுறை, கோயம்புத்தூா் – காட்பாடி வழித்தடங்களுக்கான முன்பதிவு ஈரோடு ரயில் நிலையத்தில் நடைபெறுகிறது. தனி மனித இடைவெளியை பின்பற்றி முன்பதிவானது நடைபெற்று வருகிறது. ரயில்கள் புறப்படுவதற்கு ஒன்றரை மணி நேரம் முன்பு ரயில் நிலையத்திற்கு பயணிகள் வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |