Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் மேலும் 609 பேருக்கு கொரோனா உறுதி, 5 பேர் உயிரிழப்பு என தகவல்!

சென்னை மாநகராட்சி பகுதியில் மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் நேற்றைய நிலவரப்படி பாதிப்பு எண்ணிக்கை 13,362ஆக உள்ளது. இந்த நிலையில் மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கையானது 14,000ஐ தாண்டியுள்ளது. மேலும் சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனா பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்களுள் 5 பேர் உயிரிழந்தனர். ஒமந்தூரார் மருத்துவமனையில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 47 வயது பெண், கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் ஒரு பெண் மரணமடைந்துள்ளனர்.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொசப்பபேட்டையை சேர்ந்த 78 வயது மூதாட்டி, தண்டையார்பேட்டையை 50 வயது பெண், 37 வயது ஆண் என மூன்று பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனிடையே சென்னை புழல் சிறையில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே 31 கைதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் புதிதாக 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 47ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |