Categories
சென்னை மாநில செய்திகள்

வெளியூர்களுக்கு செல்பவர்களுக்கு சென்னை மாநகராட்சி புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

வெளியூர்களுக்கு செல்பவர்களுக்கு சென்னை மாநகராட்சி புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுள்ளது.

சென்னையில் நேற்றைய நிலவரப்படி பாதிப்பு எண்ணிக்கை 13,362ஆக உள்ளது. இன்று மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கையானது 14,000ஐ தாண்டியுள்ளதக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் நாள் நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்பவர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சென்னை வருபவர்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில்,

  • சென்னையில் இருந்து பிற மாவட்டம் செல்பவர்கள் கொரோனா அறிகுறி இருந்தால் கொரோனா பரிசோதனை செய்வது அவசியம்
  • கொரோனா இல்லாத சென்னை வாசிகள் பிற மாவட்டத்தில் 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும்
  • வெளிமாநிலங்களில் இருந்து சென்னை வருவோர் பரிசோதனை, தனிமையில் இருப்பது அவசியம் சோதனையில் நோய் தொற்று உறுதியானால் மருவமனைக்கு அழைத்து செல்லப்படுவர்
  • தொற்று இல்லாவிட்டாலும் மராட்டியம், குஜராத், டெல்லியில் இருந்து வருவோர் 7 நாட்கள் தனிமைப்படுத்தி இருக்க வேண்டும் 7 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பின்னர் அனைவரும் கட்டாயம் 2ம் கட்ட பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்
  • பாதிப்பு குறைவான மாநிலங்களவை இருந்து வருவோர் தொற்று இல்லாவிட்டாலும் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும்
  • வெளிநாடுகளில் இருந்து சென்னை வருவோருக்கு உடனடி பரிசோதனை, தனிமைப்படுத்தல் அவசியம் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |