தமிழகத்தில் இன்று 687 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 12,000 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 56.65% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனோவால் இன்று 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் பலி எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21,184ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 82 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இன்று 856 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் 760 பேர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 616 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 13,980ஆக உயர்ந்துள்ளது. தற்போது 9,021 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 599 பேர் ஆண்கள், 338 பேர் பெண்கள், ஒரு திருநங்கை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 13,336 ஆண்களும், 7,842 பெண்களும், 6 திருநங்கைகளும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 43 அரசு மற்றும் 29 தனியார் மையங்கள் என மொத்தம் 72 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில் 12,605 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 4,79,233 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.