விருச்சிக ராசி அன்பர்களே…! உயர்ந்த ஆபரணங்கள் வாங்கும். தாயார் ஆதரித்து பேசுவார்கள். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். சக ஊழியர்கள் மதிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாளாக இந்நாள் இருக்கும். எதிலும் எதிர்பாராத தடைகள் கொஞ்சம் உண்டாகலாம்.
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி அடைவீர்கள் நீண்ட நாட்களாக இருந்த மன அழுத்தம் நீங்கும் படியான சூழல் உருவாகும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். எதிலும் கவனமுடன் செயல்படுவது தான் ரொம்ப நல்லது. உற்றார் உறவினர் வகையில் கொஞ்சம் கவலை அதிகமாகதான் இருக்கும். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியை கொடுப்பதாக இருக்கும்.
மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டால் மனம் அமைதியாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்பச்சை உங்களுக்கு அதிஸ்டதை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் இளம் பச்சை நிறம்.