Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…சிக்கல் தீரும்…ஆதரவு பெருகும்…!

மீன ராசி அன்பர்களே…!     தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி இருக்கும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும் நாள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். கணவன் மனைவிக்கு இடையே நீடித்து வந்த மன வருத்தம் நீங்கி சந்தோஷமான சூழ்நிலை ஏற்படும். இன்று எதிரியிடம் இருந்து விடுபடுவீர்கள். நிதானமான போக்கைக் கடைப் பிடித்தால் அனைத்து விஷயங்களும் மிக சிறப்பாக நடக்கும். காதலர்களுக்கு இனிமையான நாளாக இருக்கும். வசீகரமான பேச்சால் காரியங்கள் ஓரளவு சிறப்பை கொடுக்கும்.

முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். நிதி மேலாண்மையில் மட்டும் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் எப்பொழுதும் ஒரு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அது போலவே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |