Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

புலம்பவிட்ட கொரோனா….! ”ஒரு நாளும் இப்படி ஆனதில்லை” மாட்டிக்கொண்ட இந்தியா …!!

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் இல்லாத அளவுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மத்திய அரசை ஆட்டம் காண வைத்துள்ளது .

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகாண் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகையே மிரட்டி வருகிறது. கிட்டத்தட்ட  215க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது கோர தாண்டவத்தை ஆடிவரும் கொரோனாவுக்கு  அறுபத்தி 61.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3.70 லட்சம் பேர் உயிரை காவு வாங்கிய கரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து 27.34 லட்சம் பேர் மீண்டும் உள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளுக்கு கடும் பாதிப்பு:

உலக வல்லரசான அமெரிக்கா கொரோனாவால் சின்னாபின்னமாகி உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா வைரஸால் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா, ஸ்பெயின், பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் கொரோனா கட்டுக்கடங்காத பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுளில் மட்டும் ஏறக்குறைய 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1.73 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

 

குலுங்கிய அமெரிக்கா:

பொருளாதார ரீதியாக உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் அமெரிக்காவும், தன் நாட்டின் கொரோனா பாதிப்பை பிற நாடுகளை  திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு கிட்டத்தட்ட 18.16 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்பு அனைத்து உலக நாடுகளில் மிரள வைக்கிறது. இப்படி தனது கோர முகத்தை காட்டி வரும் கொரோனா வைரஸ் வளர்ந்த வளர்ந்த நாடு, வளர்ச்சி அடைந்த நாடு என எதையும் விட்டுவைக்காமல் பாரபட்சமின்றி தனது வேட்டையை நிகழ்த்தி வருகின்றது.

சிக்கிய இந்தியா :

உலகையே அடிபணிய வைத்த கொரோனா தாக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதனை கட்டுப்படுத்த இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள நான்காம் கட்ட ஊரடங்கு இன்றோடு நிறைவடைய இருக்கும் நிலையில் அனைத்து மாநிலத்திலும் கொரோனா பரவல் உறுதியாகி, தனது கோர பசியை தீர்த்து வருகிறது. கொரோனாவில் சிக்கியுள்ள இந்தியாவை நினைத்து ஆளும் அரசுக்கள் செய்வதறியாது திணறி வருகின்றனர்.

எவளோ பாதிப்பு :

இந்தியாவில் மட்டும் ஒரு லட்சத்து 81 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  5185பேர் உயிரிழந்துள்ள நிலையில் 86 ஆயிரத்து 936 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக வர்த்தக நகரான மகாராஷ்டிராவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மட்டும் 65 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டடு, 2,197 பேர் உயிரிழந்தனர். அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 21 ஆயிரத்து 184 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு 163 பேர் உயிரிழந்துள்ளனர்

புதிய உச்சம் தொட்ட கொரோனா:

நாளுக்கு நாள் எகிறிக் கொண்டே வரும் கொரோனா வைரஸ் தாக்கம் மக்களை நிலைகுலைய வைத்ததையோடு ஆனாலும் அரசுகளையும் மிரள வைக்கிறது. இதன் கொடூர பாதிப்பு இந்திய நாடு என்னாகுமோ என்ற கேள்வியை எழுப்பும் வகையில் இருந்து வருகிறது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 8 ஆயிரத்து 336 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

அதேபோல 205 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்தனர். இது இதுவரை இந்தியாவில் இல்லாத புதிய உச்சமாகும். ஒரே நாளில் அதிக தொற்று கண்டறியப்பட்ட நாடுகளில் உலகளவில் இந்தியா நான்காவது இடத்தில் நீடிக்கிறது. நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக பிரேசில் 30102,  அமெரிக்காவில் 23,290, ரஷ்யாவில் 8,952 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |