தமிழகத்தில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் அறிவிப்பின் அடிப்படையில் ஜூன் 30 நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 5ம் கட்ட ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
எவற்றுக்கெல்லாம் அனுமதி :
- 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நாளை முதல் பொது போக்குவரத்திற்கு அனுமதி
- பொது போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்ட மண்டலங்களில் இருந்து 50% பேருந்துகள் மட்டும் இயங்கும்
- பேருந்துகளில் உள்ள மொத்த இருக்கைகளில் 60% இருக்கைகளில் மட்டும் பணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி
- ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு பயணம் செய்ய இ-பாஸ் தேவை இல்லை
- அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் தனியார் பேருந்துகளும் இயங்க அனுமதி
- வணிக வளாகங்கள் தவிர பிற பெரிய கடைகள் 50% பணியாளர்களுடன் செயல்படலாம்
- கல்வி நிறுவனங்கள் இணைய வழிக்கல்வி கற்றலை தொடரலாம்; அதனை ஊக்கப்படுத்தலாம்
- தமிழகத்தில் ஜூன் 1 முதல் 7ஆம் தேதி வரை காய்கறிக்கடைகள், உணவகங்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரை இயங்கலாம்
- ஜூன் 8 முதல் தேநீர் கடைகள், உணவகங்களில் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி
- சலூன்கள், ஆட்டோக்கள், வாடகை டாக்ஸிகள் இயங்கலாம்.
- தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் 20% பணியாளர்கள் அதிகபட்சம் 40 பேருடன் இயங்கலாம்,
- 50% ஊழியர்களுடன் அனைத்து தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி
எவையெல்லாம் செயல்பட தடை :
- வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றை திறக்க தடை நீட்டிப்பு
- நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு செல்ல தடை ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை தொடர்கிறது கொரோனா பணியில் உள்ளவர்களுக்கு தடையில் இருந்து விலக்கு
- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பொது போக்குவரத்து தடை நீட்டிக்கும்
- மறு உத்தரவு வரும் வரை தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.
- மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்துக்கு ஜூன் 30ஆம் தேதி வரை தடை விதிப்பு
- ஜூன் 30 வரை பள்ளி, கல்லூரிகள், பயிற்சி, ஆராய்ச்சி நிறுவனங்களை திறக்க தடை நீடிக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.