Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

எல்லாரும் ஆச்சரியமா பாக்குறாங்க….! மக்களை பாராட்டிய பிரதமர் மோடி …!!

கொரோனாவுக்கு எதிரான ஒரு போரில் இந்திய மக்கள் வலுவுடன் போராடி வருகின்றார்கள் என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

மனதின் குரல் ( மங்கி பாத் ) வானொலி உரையில் இன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனாவை இந்தியா எதிர்கொண்டு  எப்படி சாதித்தது என மற்ற நாடுகள் ஆச்சர்யத்துடன் கவனித்து வருகின்றனர். மக்களின் ஒத்துழைப்பு கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி பெற முக்கிய காரணம் என்று மக்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்திருக்கிறார். 

மேலும், பொது ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக விளக்கப்பட்டு வரும் நிலையில் நாம் மேலும் ஜாக்கிரதையுடன் இருக்கவேண்டும். மக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்தால் தான் வைரஸில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும். கொரோனாவுக்கு எதிரான போரை மிகவும் வலுவுடன் இந்திய மக்கள் போராடி வருகின்றனர். இந்திய மக்களின் சேவை மனப்பான்மை காரணமாகவே இந்தப் போரில் வலுவுடன் போராட முடிகிறது. மற்ற நாடுகளை விட இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாகவே உள்ளது என்று மோடி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |