Categories
அரசியல் சற்றுமுன்

வீடியோக்களை பார்த்தேன்…! ”ரொம்ப சந்தோஷமா இருக்கு” மோடி பெருமிதம் …!!

மங்கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வாராந்திர வானொலி நிகழ்ச்சியான மங்கி பாத் மூலமாக மக்களிடம் பேசி வருகின்றார். இன்றய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அரசு எடுத்து வரும் திட்டங்கள், மக்கள் மேற்கொண்ட சேவை உள்ளிட்டவற்றை தான் பட்டியலிட்டு பேசினார். குறிப்பாக இந்த பேச்சை பொருத்தவரை நாட்டு மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டிருக்கிறார்.

நெஞ்சை தொட்டு விட்டது:

குறிப்பாக சில முக்கியமான நபர்களை எடுத்துக்காட்டாக சொல்லியிருக்கின்றார். தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த மோகன் என்பவர் தனது மகனின் படிப்பிற்கு வைத்திருந்த சேமிப்பு பணம் 5 லட்சத்தை ஏழை மக்களுக்கு செலவிடுவதற்கு செலவு செய்திருக்கிறார். அது எனது நெஞ்சை தொட்டு இருக்கிறது என்ற வார்த்தையை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நானும் பார்த்தேன்:

கொரோனா காலத்தில் இந்தியர்களால் புதிய புதிய கண்டுபிடிப்புகள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அதையும் நான் பெரிய அளவில் கவனித்திருக்கிறேன். சமூக வலைதளங்களில் நிறைய வீடியோக்களை பார்த்து பெருமிதம் கொண்டு இருக்கிறேன். மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் கிருமி நாசினி யை டிராக்டரின் மூலம் தெளிக்க கூடிய ஒரு கருவியை ஒருவர் கண்டு பிடித்து இருக்கிறார், அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

உலகமே வியக்குது:

அதே போல மற்ற இடங்களிலும் நாட்டின் பிறபகுதிகளிலும் இதே மாதிரி நிறைய பேர் தன்னலமில்லாமல் செயலாற்றி வருகிறார்கள். இத்தகைய முறையில் ஒன்றிணைந்து செயல்பட கூடிய விஷயம்தான் இந்த வைரஸில் இருந்து நம்மை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறது. இந்தியாவை உலக நாடுகள் அனைத்துமே வியப்புடன் பார்க்கிறது. இந்தியா எப்படி இவ்வளவு பெரிய சவாலை எளிமையாக சாதித்தது என்பதை உலக நாடுகள் வியப்புடன் பார்த்துகொண்டு இருக்கிறார்கள் என்பதையும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருக்கின்றார்.

நாடு முழுவதும் இருக்க சுய உதவி குழுக்கள் மூலமாக முக கவசங்கள் மற்றும் கிருமி நாசினிகள் உள்ளிட்டவை தயாரித்து ஏழை மக்களுக்கு வழங்கி வருகிறார்கள். இந்த சகோதரிகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |