Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

Breaking News மோசடி: போலி ஐஏஎஸ் அதிகாரி கைது …!!

போலி ஐஏஎஸ் என்று மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

நேற்று ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரவி என்பவர் மாவட்ட குற்றவியலில் கொடுத்த புகாரில், தன்னிடம் டிஎன்பிஎஸ்சி அரசு செயலாளராகப் பணி புரிகிறேன் என்று கூறி, அரசு வேலைக்காக 15 லட்சம்  வாங்கி, வேலை கொடுக்காமல் பணத்தை மட்டும் மோசடி செய்ததாக  மோசடி நடந்துள்ளது என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுகுறித்து விசாரித்த போலீசுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 

நாவப்பன் மற்றும் ஜார்ஜ் பிலிப் ஆகிய இருவரும் ஐஏஎஸ் அதிகாரி மாதிரி போலியாக ஐடி கார்ட், விசிட்டிங் கார்டு அடித்து மோசடி செய்தது தெரியவந்துள்ளது. மேலும் ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தெரியவந்தது. திருவண்ணாமலையைச் சேர்ந்த நாவப்பன் என்பவர் அரசு துணைச் செயலாளர் போல் நடித்தும்,  ஜார்ஜ் பிலிப் சுகாதார உதவியாளர் என்றும் மோசடி செய்துள்ளனர்.

இதையடுத்து 406, 420 ஆகிய இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நாவப்பனை கைது செய்துள்ளனர். ஜார்ஜ் பிலிப்பை தேட ராமநாதபுரம் எஸ்பி வருண் குமார் தலைமையில்   தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் திரைப்பட பாடகர் வேல் முருகனுக்கு செய்தி துறையில் பணி வழங்க அனுமதி கடிதம் கொடுத்தது அம்பலமாகியுள்ளது.

Categories

Tech |